சென்னையில் கீழ்க்கண்ட பகுதிளில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. தாம்பரம், கிண்டி மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


தாம்பரம் :


மாதம்பாக்கம், படுவாஞ்சேரி, அன்னை சத்யாநகர், வெல்கம் காலனி, குறிஞ்சி நகர், கணேஷ் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


கிண்டி :


வனுவாம்பேட்டை, கேசரி நகர், திருவள்ளூர் தெரு, தாகூர் தெரு, மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை சங்கரன் தெரு, பொன்னியம்மன் கோவில், மடிப்பாக்கம் பிரதான சாலை, அண்ணா தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


அம்பத்தூர் :


திருவேற்காடு கேந்திர விஹார், மதிரவேடு, நூம்பல், பி.எச்.சாலை, மேதா மருத்துவமனை, மாக்னோ எஸ்டேட்


மேற்கண்ட பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்தடை செய்ய வாய்ப்புள்ளது.


சென்னையில் நேற்று இரவு முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று கிண்டி, தாம்பரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதால் அந்த பகுதி மக்கள் மின்சார தொடர்பான பணிகளை விரைவாக முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க : TN Rain : கனமழை... கனமழை.. கனமழை..! தமிழ்நாடு முழுவதும் கொட்டித் தீர்க்கும் மழை...! மக்கள் கடும் அவதி..


மேலும் படிக்க : Schools Colleges Leave: தொடரும் அதிகனமழை: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?