சென்னையில் மதியம் வெயில் அடித்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Continues below advertisement

சென்னையில் மழை பெய்யும் இடங்கள்:

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கிண்டி, மாம்பலம், பெரம்பூர், பொன்னேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், திருப்போரூர், திருவொற்றியூர், வண்டலூர, மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Continues below advertisement

கன மழை எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.அதேபோல மழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்

வானிலை நிலவரம்:

வங்கக் கடலில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில்‌ இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ சற்றே வலுப்பெற்று தமிழகம்‌, புதுவை கடற்கரையை நோக்கி 10- 12 தேதிகளில்‌ நகரக்கூடும்‌.

இதன்‌ காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபரம்‌, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண