சென்னையில் பராமரிப்புக் காரணங்களுக்காக கே.கே நகர், பெருங்குளத்தூர், மேற்குதாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புக் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன்படி இன்று சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் எனவும், பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இன்று சென்னையில் மின்தடை ஏற்படவுள்ள முக்கிய இடங்கள் என்னென்ன என அறிந்துக்கொள்வோம்.
பெரும்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்:
பிள்ளையார் கோவில் தெரு, கணபதிபுரம், பெருமாள் கோவில் தெரு, சுப்பிரமணிய நகர், ஏ.ஜி சர்ச், பாரதியார் சாலை, வேளச்சேரி மெயின்ரோடு, எம்பசி அப்பார்மென்ட், குளோபல் மருத்துவமனை, குருதேவ் காலணி மற்றும் இந்திரா ப்ரியதர்ஷினி நகர்.
கடப்பேரி மின்தடை ஏற்படும் இடங்கள் :
கஸ்தூர்பாய் நகர், கே.கே பாளையம், சுந்தராம்பாள் காலணி, ரமேஷ் நகர்.
மேற்கு தாம்பரத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
முல்லை நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், சிடிஓ காலணி,கன்னடபாளையம் பழைய பெருங்குளத்தூர் பஞ்சாயத்து சாலை, முடிச்சூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே. நகரில் மின்தடை ஏற்படும் இடங்கள்:
காமாட்சியம்மன் நகர், காமகுடி நகர், கடம்பாடியம்மன் நகர், வேலன் நகர், ராதா அவென்யூ, ராதா நகர், லட்சுமி நகர், முரளி கிருஷ்ணா நகர், கிருஷ்ணா நகர் பள்ளி வீதி, காமராஜர் சாலை ஏபிஎம் நகர், அபிராமி நகர், காந்தி நகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள இடங்கள்.
துரைப்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்: சோழிங்கநல்லூர் எல்காட் அவென்யூ, துரைப்பாக்கம் ரிவர் வியூ ரெசிடன்சியல் காலணி, ஈஸ்வரன் சாலை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்
பெரம்பூரில் மின்தடை ஏற்படும் இடங்கள்: கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், தாகூர் நகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்.
சோத்துபெரும்பேட்டில் மின்தடை ஏற்படும் இடங்கள் : புதூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, அருமந்தை, திருநீலை
பெருங்குளத்தூரில் குறிஞ்சி நகர், பாரதி நகர், வீரலெட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதற்கான முன்னெச்சரிக்கையோடு தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக முன்னதாக மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.