தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 


வாக்களிக்க வந்த பிரபலங்கள்:


நடிகர் விஜய் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக தனது விருப்ப சிவப்பு நிற ஆல்டோ காரில் சென்று நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.


 




 


அதைப்போல நடிகர்கள் கமல்ஹாசன், அருண் விஜய், நடிகை குஷ்பூ, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கை செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி தி நகர் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர்.