சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழிதடங்களில் சுமார் 117 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் வேகமாக நடைபெற்ற வருகின்றன. இந்த 3 வழிதடங்களும் பயன்பாட்டிற்கு வரும்போது சென்னையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக நான்காவது மற்றும் 5வது வழித்தடத்தை நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. 

பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை - parandur to poonamallee metro

அதாவது சென்னை கடற்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான நான்காவது வழித்தடத்தை, புதியதாக அமைய உள்ள சென்னையில் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் வரை நீட்டிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதேபோன்று மாதத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தை, கோயம்பேடு பகுதியில் இருந்து ஆவடி வரை நீடிக்கவும் சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன.

மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ள பாதை

பூந்தமல்லி மெட்ரோ பகுதியில் இருந்து தொடங்கி செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காடுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்துர் விமான நிலையம் வரை செல்லும் வகையில் நான்காவது வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.

இந்த வழித்தடத்தில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக திட்ட செலவு 15906 கோடி ரூபாய் நிதி செலவாகும் என கணிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் என்னென்ன ? What are the planned metro Station along Poonamallee to Parandur airport route 

பூந்தமல்லி, நசரத்பேட்டை, நசரத்பேட்டை காவல் செக் போஸ்ட், செம்பரம்பாக்கம், திருமிசை டவுன்ஷிப், பாப்பான் சத்திரம், செட்டிப்பேடு, தண்டலம், இருங்காடு கோட்டை, இருங்காடு கோட்டை சிப்காட், பென்னலூர், ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், சுங்குவார்சத்திரம், ராஜகுளம் உள்ளிட்ட 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் ‌: Project Highlights of Poonamallee to Sunguvarchatiram Metro 

பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை சுமார் 28 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ளது. இடைப்பட்ட தூரத்தில் 14 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக மதிப்பு ரூ. 8,779 செலவாகும் என திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 16 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் நிலையம் மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பூந்தமல்லிக்கு இடையே இருக்கும் என்பதால் மிகப்பெரிய அளவில் இது போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தும்.

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் பணிக்கு நிதி ஒதுக்கீடு

இதற்காக தமிழக அரசு ஒப்புதல் அளித்து இருந்த நிலையில், முதற்கட்டமாக மெட்ரோ பணிகளுக்கான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் பணிக்கு ரூபாய் 2126 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.