உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
சென்னை கிண்டியில் உள்ள லேபர் காலணி அருளாயம்பேட்டை பிரதான சாலையில் உள்ள லயன்ஸ் கிளப் தொடக்கப் பள்ளியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் முதலமைச்சர் காப்பீடு திட்டம் குறித்து விண்ணப்பித்த நபருக்கு சான்று , சொத்துவரி வேண்டி விண்ணப்பித்த நபருக்கு சான்றுா, குடும்ப அட்டை வேண்டி விண்ணபித்த நபருக்கான சான்று மற்றும் குழந்தை பெயர் பதிவுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு பிறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட 7 நபர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ;
கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நகர்புற பகுதிகளில் 3,768 என்கின்ற இலக்கோடு 13 அரசு துறையின் மூலம் 43 சேவைகள் வழங்கப்படுகிறது. அதே போல ஊரக பகுதிகளில் 6,632 முகாம்கள் 15 துறைகள் சார்பில் 46 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , ஆதி திராவிட நலத்துறை , பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நலத்துறை , தொழிலாளர் நலத்துறை , வீட்டு வசதி , நகர்ப்புற வளர்ச்சி துறை உள்ளிட்ட 13 துறைகளின் சார்பில் 43 வகையான சேவைகள் வழங்கும் திட்டம் நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை கடந்த 2 மாதங்களில் 5,474 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 50 சதவீதம் முகாம்கள் நடத்துள்ளது. இதுவரை 43,70,449 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
சென்னையில் 202 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது எனவும் சென்னையிலும் 50 சதவீதத்தை கடந்து முகாம்கள் நடக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் 198 முகாம்கள் சென்னையில் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
மூளை தின்னும் அமீபா தொற்று தமிழகத்தில் பாதிப்பு உள்ளதா என்ற கேள்விக்கு
பருவமழை காலங்களில் வரக்கூடிய நோய் தொற்று தான் தற்போது உள்ளது. தமிழ்நாட்டில் புதிய நோய் தொற்று எதுவும் இல்லை. முகக் கவசம் அணிய வேண்டும் போன்ற பதட்டங்கள் எதுவுமில்லை. மூளை தின்னும் அமீபா தொற்று கேரளாவில் அதிகமாக உள்ளது. சேற்றில் உருவாகும் வைரஸ். குளிக்கும்போது மூக்கு வழியாக வைரஸ் பரவும், இது தொற்று நோய் அல்ல என்றாலும் தமிழ்நாட்டிலும் தூர்வாரப்படாத குளம் , குட்டைகள் , நீச்சல் குளங்களில் குளோரின் போடாமல் மாசு பணிந்து இருக்கக் கூடிய நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு உடன் சேர்ந்து மாநகராட்சி இடங்களில் உள்ள நீச்சல் குளங்கள் ஆய்வு செய்கிறார்கள், குளோரின் போடுகிறார்களா உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மூளையை தின்னும் அமீபா பாதிப்பு இதுவரை தமிழ்நாட்டில் தென்படவில்லை. இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனத் தெரிவித்தார்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தான கேள்விக்கு
கடந்த மாதம் 2 ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற முகாம்களில் ஒவ்வொரு முகாம்களிலும் 57 ஆயிரத்துக்கு மேற்பட்டடோர்கள் பயன்பெற்று உள்ளனர். வரும் சனிக்கிழமை தமிழத்தில் 37 இடங்களிலும் சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்த திட்ட முகாம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 1256 முகாம்கள் நடத்தி முடிக்கப்படும்
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நல்லக்கண்ணு எப்படி உள்ளார் என்ற கேள்விக்கு
நல்லகண்ணு அவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளார்.
சமூக நீதி பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்தான கேள்விக்கு
அதைப் பற்றி பேசுவதற்கு தகுதி வேண்டும் அவர் பேசுவதற்கு முதலில் தகுதி உள்ளதா என்பதை அவர் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு குறைந்துள்ளது குறித்தான கேள்விக்கு ;
ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியதும் அவர்கள் தான் , குறைத்ததும் அவர்கள் தான் , இத்தனை நாட்களாக மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள் என அவர்களுக்கு தெரியாதா ? என தெரிவித்தார்.