சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது..


தமிழ்நாடு வணிகர்கள் நல வாரியம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரியம் 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நல வாரியம் இன்று வரைக்கும் சிறப்பாக நடந்து வருகிறது. வணிகர்கள் நல வாரியம் என்பது அவர்களின் உரிமையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது . நமது தலைவர் கலைஞர் இந்த வாரியத்தை தொடங்கிய போது முதலில் அலுவலர் உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள். இதனை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கையை 30 பேராக உயத்தப்பட்டது. 




வணிகர்களின் நல வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும்


மேலும் தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம் தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திற்கு பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக உயர்ந்திருக்கு என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். வணிக நல வாரிய உறுப்பினர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட 1 லட்ச ரூபாய் நிதி உதவி என்பதை 3 லட்ச ரூபாய் உயர்த்தி இதுவரைக்கும் இந்த திட்டத்தின் கீழ் 390 குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. வியாபாரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் 5000 ரூபாய் வழங்கப்பட்ட நிதியை 20 ஆயிரம் உயர்த்தினோம் 29 உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்.


இதய அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை பெற்று மருத்துவ காப்பீடு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. பெண் உறுப்பினர்களுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 


வணிகம் அமைதியாக நடத்தும் வகையில் அமைதி மிக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.வணிகத்துக்கு ஆக்கம் ஊக்கம், அளிப்பது தான் தமிழ்நாடு , ஆண்டுதோறும் நடைபெறு வணிகர்சங்கத் மாநாட்டில் தொடர்ந்து கலந்து கொண்டு உங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றி வருகிறோம் . 




வணிகர்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் முதல்வர் அதிரடி


மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளுக்கான குத்தகை ஒன்பது ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக வீடுகளில் திருத்தம் செய்து 1.08.2024ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். 


தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காண முடியவில்லை என யாரும் சொல்லக்கூடாது. கடைகளில் தமிழில் பெயர் வைக்க வணிகர்கள் முன் வர வேண்டும்.


குறிப்பாக சிறு வணிகர்களும் வணிக நிறுவனங்களும் நிதி வளர்ச்சிக்கு மட்டுமல்ல மனித வளர்ச்சிக்கும் அடிப்படையானவை. வணிகர்களின் கோரிக்கையை எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம். நமக்கு இடையில் இடைத்தரகர்கள் கிடையாது அவை இருக்கவும் கூடாது. வர்த்தகமாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். வணிகர்களின் கோரிக்கைகளை தெரிவித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.