சென்னையில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் நேரம், காலம் பார்க்காமல் பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களும் ஆங்காங்கே சென்று பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திமுக அரசுக்கு எதிரான பரப்புரைகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்து வரும் நிலையில், அதற்கு உடனுக்குடன் திமுக ஐ.டி விங் அணியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
டி.ஆர்.பி. ராஜா கேட்டார் - முதல்வர் செய்கிறார்
இந்நிலையில், சமூக வலைதளங்களில் களமாடும் ஐ.டி. விங் உறுப்பினர்களை ஊக்குப்படுத்தும் விதமாக சென்னை அறிவாலயத்தில் இந்த இரவிலும் பணியாற்றும் திமுகவினரை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி வருகிறார். திமுக தகவல் தொழில்நுட்ப செயலாளரும் தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல்வர் இந்த சந்திப்பை நடத்தி வருகிறார் .