சென்னையில் கன மழை கொட்டி வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை, வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கைகளை நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.
வடகிழக்கு பருவ மழை ஏற்பாடுகளை முடுக்கிவிடும் முதல்வர்
வெள்ளம் அதிகம் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்ட சென்னை புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் உள்ளிட்டவற்றை முதல்வரே நேரடியாக வழங்கி வருகிறார்.