சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையானது. இரவு மற்றும் காலை நேரங்களில்தான் கனமழையானது இருக்கும் எனவும் சென்னையில், இன்று மாலையிலிருந்தே மழை தொடங்கும் எனவும் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.




சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவூர், பெரியபனிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அதிகாரிகளுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


டென்ஷனான அமைச்சர்


 மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மழை நீர் கால்வாய்கள் எவ்வாறு தூர்வாரப்பட்டுள்ளது, என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கெருகம்பாக்கம் பகுதியில் மழைநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், தற்காலிக கால்வாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பார்த்து, என்ன பிரயோஜனம் ஒரு வேலையும் நடக்கவில்லை என அதிகாரியிடம் கூறினார். 




அன்பரசன் பேசுகிறேன்


மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சம்பவ இடத்தில் இருந்து, அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் அமைச்சர் என்று கூறாமல் அன்பரசன் பேசுகிறேன் என அதிகாரிகளிடம் பேசியது குறிப்பிடத்தக்கது. கால்வாய்களை முறையாக அமைக்க வேண்டும் எனவும் அதன் மீது போடப்பட்டுள்ள செடி, கொடிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


அமைச்சர் சொல்வதென்ன ?


இதையடுத்த அவர் அளித்த பேட்டியில்: எவ்வளவு மழை பெய்தாலும் தொகுதியில் உள்ள மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகள் செய்யப்பட்டுள்ளது . ஆலந்தூர் மண்டலத்தில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது ஒரு குழுவில் ஐந்து முதல் ஆறு பேர் உள்ளனர். சுழற்சி முறையில் பணி செய்வார்கள் 13 இடங்களில் 2000 பேர் தங்குவதற்கு இடம் அமைக்கப்பட்டுள்ளது 52 மின் மோட்டார்கள், மரம் வெட்டும் கருவி, ஜேசிபி எந்திரங்கள், டிப்பர் லாரிகள் தயார் நிலையில் உள்ளது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகளை செய்ய தயாராக உள்ளோம்.




செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாயில் வேகமாக பணிகள் நடந்து வருகிறது‌சிக்கராயபுரம் கல்குவாரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது. கொல்லசேரியில் கால்வாயை தனியார் கட்டுமான நிறுவனம் மூடி உள்ளது. அதனை அகற்றிய பிறகுதான் வீடு கட்ட வேண்டும் என கூறிவிட்டோம் என பேசினார்.