சனிக்கிழமை கமல் எண்ட்ரி செம ரகளையாக நடந்ததை அடுத்து, இன்றைய ப்ரோமோவில் அபிஷேக் ப்ரியங்கா மீதான தன் சகோதர உணர்வை வெளிப்படுத்தினார். அதில், “எப்போவுமே அவளை நான் ஒரு சகோதரியாதான் பாக்குறேன்” என்றார். ப்ரியங்கா அபிஷேக்கை அணைத்துக்கொள்ள, உன் கூடவே பொறக்கணும் பாட்டை போட்டு எமோஷனை மிக்ஸ் செய்தார் பிக்பாஸ். நமக்கும் கண்ணில் வியர்த்தது.





நேற்று, ஷோ ஸ்டார்ட் பண்ண உடனே, “எல்லோரும் ஆன்லைன் கிளாஸைப் பத்தி சந்தோஷமும், கவலையும் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில இதில் பெறுவதற்கு நிறைய இருக்கிறது என சொல்ல ஆசைப்படுகிறேன்” அப்படின்னு சொன்னார் கமல்ஹாசன். ஆன்லைன் க்ளாஸை ஆதரிக்கிறாரா கமல்ஹாசன்?னு அப்படியே டிங்குன்னு ஒரு டைட்டில் அலாரம் அடிச்சுது நமக்கு. ”வீடெல்லாம் ஜம்முன்னுதான் இருக்கு ஆனா ஜிம்மில்லன்னு ஏற்கெனவே சொன்னேன். அம்மிக்கல்லையெல்லாம் எடுத்து நிரூப் எக்சர்ஸைஸ் பண்றாரு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு நிரூபித்த நிரூப்புக்கு வாழ்த்துக்கள்னு” சொன்னாரு கமல்.. (என்ன ஆண்டவரே இன்னைக்கு ஒரே ரைமிங்கா இருக்கு) கவித கவித. கேஸ் மூலமாவும் பேச முடியும்னு நிரூபிச்ச ப்ரியங்காவுக்கு வாழ்த்துக்கள்னு சொன்னதும் அக்மார்க்கான அஹ்ஹாஹா சிரிப்பைச் சிரிச்சாங்க ப்ரியங்கா. டீ போட்றது நல்ல கலை சிபின்னு சொல்லிட்டு, ”டீ நல்லா போடுங்க.. அது உங்களை எங்கேயோ கொண்டு போய் சேர்த்துடும்னு” சொன்னார். மோடிஜி ஃபேன்ஸுக்கு கேட்டுச்சுங்களா? வீட்டுக்குள்ள துப்பாக்கிச் சத்தம் கேக்க காரணமா இருந்தது அபிஷேக்தான்னு சொல்லிட்டு, “நாட்டுக்குள்ள கேக்கும், பாத்திருக்கோம். நாமெல்லாம் தூங்கிட்டு இருந்தோம்னா எங்கே வேணா துப்பாக்கிச்சூடு நடக்கும்”னு சொன்னார். ஆண்டவர் அரசியல் கடாவா வெட்டிக்கிட்டு இருந்தாரு.


ஐய்க்கி பெர்ரி, மதுமிதாவுடைய தமிழ் பத்து பேசுன தமிழ், நானும் ரசிகன்னுக்கு சொல்லி குஷிப்படுத்தினார். தமிழ்மொழியையும், தாய்மொழியில படிக்குறதுடைய அவசியத்தையும் மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டே இருந்தார் கமல். நேத்தைக்கு எபிசோட் ஒரு ட்ரீட்தான்.