திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் ; அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில் என்ன?

திருப்பரங்குன்றம்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் , பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன்.

Continues below advertisement

கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Continues below advertisement

சென்னை ஓட்டேரி அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி.கே சேகர்பாபு பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்களின் அனைத்து தேவையும் நிறைவேற்றி முதன்மையான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

இதுவரை 2504 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேலான 49 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆதி படவேட்டம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வருகிற மார்ச் மாதம் 3 - ம் தேதி நடைபெற உள்ளது.

இதுவரை ரூ.7154 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள்  3000க்கும் மேற்பட்ட கோயில்களின் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம் போராட்டம் - பாஜகவினர் தான்

திருப்பரங்குன்றம்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் பாஜகவினர் என்றுதான் குறிப்பிடுவேன். இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம்.

அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், இந்துக்கள் போன்ற மக்களே தேவையற்ற ஒரு பிரச்சனை என்று கூறியிருக்கிறார்கள். அண்ணாமலை மற்றும் ஹெச். ராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். எங்கள் முதல்வர் எங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார்.

வடமாநிலத்தை போல் தமிழகத்தில் கலவரம்

வட மாநிலத்தைப் போன்று கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். எங்கள் முதல்வர் எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். பெரியார் மண்ணில் திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர் இந்துக்களும் மாமா மச்சானாக சகோதரத்துவம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் போன்ற கோயில் பிரச்சனையை எடுத்ததால் பாரதிய ஜனதா கட்சிக்கு பூஜ்ஜிய வாக்கு சதவீதம் கூட கிடைக்கப்போவதில்லை.

இதை வைத்து அரசியல் ஆக்க வேண்டாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் குளிர்காய நினைக்கிறார்கள். அண்ணாமலை, ஹெச்.ராஜா ஆகியோர் வட மாநிலம் போல இங்கே பிரச்சினையை உருவாக்க நினைக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும். அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல, அவர் இரட்டை நாக்கு உடையவர். இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறார்.‌ அவர் மனிதரே இல்லை.

துறை அமைச்சர் என்ற முறையில் விரைவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல உள்ளேன். கடந்த காலங்களில் சரியான திட்டமிடல் இல்லை. அதனால் தான் திட்டங்கள் காலதாமதம் ஆகிறது. வருகிற ஏப்ரல் - மே மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

மேலும் ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Continues below advertisement