இன்று சென்னை விமான நிலையம் வந்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்தித்தபோது தெரிவித்ததாவது: 


மகாராஷ்டரா மாநில சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ராட்ஷ்ரிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணியாக தலா 10 தொகுதிகள் வீதம் 20 தொகுதிகளில் போட்டியிடகின்றன. மீதம் உள்ள தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி அனுகினால் போட்டியிடும் இடங்களில் மறு பரிசீலனை செய்யப்படும். 


இந்தியா கூட்டணி வெற்றியை பாதிக்க செய்யும் நோக்கம் கிடையாது. தேர்தலில் போட்டியிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து விட்ட நிலையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்று விளக்கம் தந்தார்கள். மும்பை தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பாய் உள்ள பகுதிகளில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பதை மும்பையில் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.


அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்


எல்.முருகன் அருந்ததியர் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி தான் அருந்ததியர் சமூகத்திற்கே தெரியவந்தது. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அருந்ததியர் என காட்டி கொண்டதில்லை. அருந்ததியர் இயக்கங்களுடன் பங்கேற்றதில்லை. அருந்ததியர்களுக்காக எந்த இடத்திலும் போராடியதில்லை. குரல் கொடுத்ததில்லை. அவர் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தார். பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். தான் அருந்ததியர் என அடையாளம் காட்டியது. அருந்த்தியர் இடஒதுக்கீட்டான எந்த போரட்டத்திலும் பங்கேற்றதில்லை. குரல் கொடுத்து வாதாடியதில்லை. போராடிய இயக்கங்களுடன் நின்றதில்லை. 


அருந்தியர் இடஒதுக்கீடு


தமிழ் நாட்டில் உள்ள அருந்த்தியர்களும் எல்.முருகனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்க காலத்தில் இருந்து அருந்ததியர் சமுதாய இடஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. அருந்ததியர் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களிலும் மாநாட்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்று உள்ளது. 


சில உதிரிகள் கட்சியில்


இந்த கட்சியால் தான் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடே கிடைத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அருந்ததியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று பொறாமை கொண்ட சில உதிரிகள் கட்சியில் உள்ளவர்கள் வெளியேற்ற தொடர்ந்து அவதூறுகளை பரப்புகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு எதிர்த்து அல்ல. அவதூறு பரப்புவது அநாரீகமான அரசியல். உள் ஒதுக்கீட்டை எதிர்த்து பேசிகிறவர்களை பற்றி விமர்சிப்பது இல்லை. 


கூறு போடுவது போல் 


அருந்ததியர்களை ஆதரித்த ஒரே தலித் அமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சொல்லி தருகின்ற படி விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்புகின்றனர். அம்பேத்கர் கண்ட கனவுக்கு எதிராக இருக்கிறதால் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தலித்களை விருப்பம் போல் கூறு போடுவது போல் இருக்கிறது. அரியானாவில் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க. அரசு செய்கிற முதல் வேலையே சப்- கேட்ட்ஜெக்ரிஷன். எந்த காலத்திலும் தலித்கள் ஒன்று சேர முடியாத வாய்ப்பு இந்த சப்- கேட்ட்ஜெக்ரிஷன் மூலம் ஆகும்.


சந்தேகங்கள் களைய வேண்டும்


சட்டம் வகுக்கும் போதே தலித்கள், பழங்குடியினர் தொடர்பாக நிலைபாடு கொண்டு வர வேண்டும் என்றால் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் விவாதித்து நிறைவேற்றிய பின்னர் தான் குடியரசு தலைவர் ஒப்பதல் அளிக்க வேண்டும் என்று அம்பேத்கர் கொண்டு வந்து உள்ளார். இந்தியா முழுவதும் தலித்கள், ஆதிவாசிகள் ஒன்றுப்பட்டு இருந்தால் மட்டும் தான் எதிர்காலத்தில் தற்காத்து கொள்ள முடியும். இதை அடித்து நொறுக்கி தகர்க்கிற பணியை தான் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் ஈடுபட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சப்- கோட்டாவை ஆதரித்தோம்.


ஆனால் சப்- கேட்ட்ஜெக்ரிஷன் என்ற பெயரில் தனி கோட்டாவை வழிவகை செய்கிறதை எதிர்க்கிறோம். பொருளாதார அளவு கோலை எதிர்க்கிறோம். தாக்கல் செய்த மனு என்பது ரிவ்யூ பெட்டிசன் தீர்ப்பை தந்த நீதிபதிகளை மறு ஆய்வு செய்ய சொல்கிறோம். தீர்ப்பை மாற்றி எழுத வாய்ப்பு இல்லை. ஆனால் சந்தேகங்கள் களைய வேண்டும். எதிர்ப்பை பதிவு செய்ய வழக்கை தொடர்ந்தோம். அருந்ததியர்களுக்கு எதிரானது இல்லை. எல்.முருகன் ஆர்.எஸ்.எஸ். சங்கி. அவர் அருந்ததியர் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார் .