சென்னையில் பட்டப்பகலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காவல்துறைக்கு மிகப்பெரிய இழுக்கு எனவும், அதிலும் குறிப்பாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் என்பது இழிநிலையான செயல் எனவும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடுமையாக சாடியுள்ளார்.
ஆவடியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி ஞாயிற்றுகிழமையை அம்மனுக்கு சிறப்பான அலங்காரத்தில் பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஆவடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் அவர்கள் அதிமுக கொடி பொருத்திய காரில் கட்சி வேட்டியுடன் வந்து கடும்பாடி சின்னம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் சுமார் 200 பேருக்கு சுவையான வெஜ் பிரியாணியை அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன்
சென்னையில் பட்டப்பகலில் நகை கொள்ளை சம்பவம் காவல்துறைக்கு மிகப்பெரிய இழுக்கு எனவும். அதிலும் குறிப்பாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 லட்சம் சன்மானம் என்பது இழிநிலையான செயல் எனவும் கூறினார். மேலும் தமிழகத்தில் முழு நேர கல்வியாளரையே கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக நியமிக்க வேண்டுமெனவும் தமிழகத்தில் கஞ்சா போதை பொருட்கள் விவாகரத்தில் எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எனவும், இந்த விவகத்தில் காவல்துறை மிகவும் சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிக்க வேண்டும் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் கூறினர்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஆவின் நிறுவனத்தில் ஊழல் நடைபெறுவதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆவின் நிறுவனத்தில் மறுக்க முடியாத அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது அரசு கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நீட் பயிற்சிகள் தற்போது திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவகம், மண்டபம் மக்கள் வரிப்பணத்தில் பலகோடி ரூபாய் பொருட் செலவில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்