சென்னை மயிலாப்பூரில் நகைகளுக்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலையை நிகழ்த்த கொலையாளிகள் செய்த சதிதிட்டம் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


கொலை நடந்த நாளன்று கொலையாளி கிருஷ்ணா வீட்டுப்பணிப் பெண் வீரம்மாளை தாமதமாக வரும் படி கூறியுள்ளார். மேலும் வீரமமாளிடம் கடந்த மாதமே வீட்டு நுழைவு வாயில் சாவியை கொடுத்துவிட்டு ஸ்ரீ காந்த்  அமெரிக்கா சென்ற நிலையில், வெள்ளி அன்று மாலையே வீரம்மாளிடம் சாவியை வாங்கியுள்ளார் கிருஷ்ணா. இதனையடுத்து தாமதமாக 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டியே இருந்தது. இதனால் ஆடிட்டர் வீட்டிற்கு வரவில்லை என நினைத்து வீரம்மாள் வீட்டுற்கு திரும்பியுள்ளார். கொலை திட்டத்தை நடத்த டார்ஜிலிங்கில் உள்ள பள்ளியில் தனது மகனை சேர்த்த கிருஷ்ணா பெற்றோரையும் 15 நாட்களுக்கு முன்னதாகவே நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது கைதாகி புழல் சிறையில் உள்ள இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து  விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 



                                                                 


முன்னதாக, சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் பிரபல ஆடிட்டர் ஸ்ரீகாந்த். வயது 60. இவரது மனைவி அனுராதா. அவரது வயது 55. இவர்களது மகள் சுனந்தா அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகள் சுனந்தாவை பார்க்க சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும்  கடந்த 7 ஆம் அதிகாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர். இவர்களை வீட்டுக்கு அழைத்து வர இவர்களது கார் டிரைவர் லால் கிருஷ்ணா வந்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த லால்கிருஷ்ணா கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.


சந்தேகமடைந்த மகள்


இதையடுத்து, சுனந்தா தங்களது பெற்றோர்கள் இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனரா? என்று தெரிந்து கொள்ள தனது பெற்றோர்களுக்கு போன் செய்துள்ளார். அப்போது, தந்தை, தாய் இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், பதற்றமடைந்த சுனந்தா அடையாறில் உள்ள தனது உறவினர் திவ்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


திவ்யா தனது கணவர் ரமேஷூடன் நேரில் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால், அக்கம்பத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் உள்ளே ரத்தக்கறை இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீகாந்திற்கு ஈ.சி.ஆர். சாலையில் ஒரு பங்களா இருப்பது தெரியவந்துள்ளது.


8 கிலோ தங்கம் மற்றும் 50 கிலோ வெள்ளி


அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே புதியதாக குழி தோண்டியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த குழியை தோண்டியபோது ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா சடலங்கள் இருந்துள்ளது. இந்த சூழலில்தான் கொலையை செய்து விட்டு ஆந்திராவிற்கு தப்பிச் சென்ற கொலையாளிகள் கார் ஓட்டுனர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியையும் போலீசார் கைது செய்து செய்தனர். கைது செய்யப்பட்ட லால்கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளியிடம் ரவியிடம் இருந்து 8 கிலோ தங்கம் மற்றும் 50 கிலோ வெள்ளி வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து  ஆடிட்டர் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 10 வைர மூக்குத்திகள், பிளாட்டினம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.