காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அமைச்சர் தாமோ. அன்பரசன் கலந்துரையாடும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை மனுக்களை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பருத்திவீரன் புகழ் திரைப்பட நடிகர் சரவணன் கோரிக்கை மனு அளித்து அமைச்சரின் உதவியை நாடினார்.
இதுகுறித்து பேசிய திரைப்பட நடிகர் சரவணன், தான் கடந்த 2014 ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடமிருந்து லேக் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கியதாகவும், அதில் தனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் 700 முதல் 800 சதுர அடி வரை வரும் என்றும், கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடத்தை, அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிக் கொடுத்த ராமமூர்த்தி என்பவர், தான் கொரோனாவிற்காக ஊருக்கு போவதும், வருவதுமாக இருந்த நேரத்திலும், தனக்கு இரு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியின் கருத்து வேறுபாடு காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு செல்லாமல் இருந்ததாலும், ராமமூர்த்தி கார் பார்க்கிங் இடத்தில் கடையை கட்டிக்கொண்டு மின் இணைப்பையும் வாங்கி விட்டதாகவும், வரி கட்டி விட்டதாகவும், சொல்கிறார். என்னுடைய கார் பார்க்கிங் யூ டி எஸ் இடத்தை அவருடையதாக கூறி ஏமாற்றுகிறார், என்னுடைய இடத்தை ஏமாற்றிவிட்டு ராமமூர்த்தி என் மனைவி வெட்டுவதாகும் குத்துவதாகும் மிரட்டுகிறார்.
ராமமூர்த்தி அவருடைய மனைவி ஜெயமணி மற்றும் பத்திரம் பதிவு செய்த இளவரசன் ஆகிய மூன்று பேர் தன்னை ஏமாற்றுவதாகவும், அந்த இடத்தை அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது புகார் அளித்துள்ளதாகவும், அந்த இடத்தை மீட்டு வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்து அமைச்சர் தாமோ. அன்பரசனிடம் முறையிட்டு மனு கொடுத்ததாகவும், அமைச்சரின் உதவியை கேட்டிருப்பதாக தெரிவித்தார். போரூரில் புகார் அளித்து ஆறு மாதம் ஆகிவிட்டதாகவும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதைக் கேட்ட போது முதலில் அடுக்குமாடி குடியிருப்பு விற்ற உரிமையாளர் மீது புகார் அளித்து விட்டதாகவும், கடையை கட்டியது யார் என்று தெரியாமல் பொதுவாக புகார் அளித்து விட்டதாக அது மட்டும் இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் கூடுதலாக கட்டி இருப்பதாகவும் அதனால் குடியிருப்பு வாசிகள் அனைவரும் சேர்ந்து புகார் அளித்துள்ளதாகவும்,
இப்போதுதான் ராமமூர்த்தி என்பவர் தான் இதையெல்லாம் செய்துள்ளார் என்று தெரிய வருகிறது. அதனால் ராமமூர்த்தி மீது கமிஷ்னர் அலுவலகத்திலும் புகார் அளித்து உள்ளதாகவும், குன்றத்தூர் பிடிஓ-விடம் கொடுத்துள்ளதாகவும், அமைச்சரிடமும் அளித்துள்ளதாகவும், திரைப்பட நடிகர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.