இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவால் , அவமானம் தாங்காமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Continues below advertisement


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்துார் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 26 ) இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. தம்பதி இடையே குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. முத்துலட்சுமி தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.


அதிகாலையில் முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலங்குளம் போலீசார் விசாரணையில் , முத்துலட்சுமிக்கு , பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரியை சேர்ந்த நபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்ததும் , இருவரும் இணைந்து வீடியோ எடுத்ததும் , அதை அடிப்படையாக கொண்டு அந்த நபர் பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது.


முத்துலட்சுமி தன் நகைகளை விற்று 4 லட்சம் ரூபாய் வரை அந்த நபருக்கு கொடுத்துள்ளார். அவர்கள் பழகிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் அவமானத்தில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.


முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், மருதம்புத்துாரை சேர்ந்த சிலரது பெயர்களை குறிப்பிட்டு தற்கொலைக்கு துாண்டியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலை


தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த பிரகாஷ் ( வயது 24 ) என்பவரும் கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த கார்த்திக் ( வயது 21 )  என்பவரும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் கார்த்திக் தரப்பை சேர்ந்த சிலரை பிரகாஷ் தாக்கியுள்ளார்.


பிரகாஷ் தரப்பினரை தாக்கும் முயற்சியில் கார்த்திக் தரப்பினர் ஈடுபட்டனர். தாளமுத்துநகரில் உள்ள பிரகாஷ் வீட்டிற்கு கத்தி , அரிவாளுடன் சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த சிசி டிவி கேமராக்களை உடைத்துள்ளது. மேலும் கிருஷ்ணராஜபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகராஜ் ( வயது 18 )  அவரது நண்பர் முகில் ( வயது 19 )  ஆகியோரை மர்ம கும்பல் திடீரென தாக்கியது.


முகில் தப்பியோடிய நிலையில் , நாகராஜை கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பியோடியது. நாகராஜ் உயிரிழந்தார். துாத்துக்குடி வடபாகம் போலீசார் சுந்தரவேல்புரத்தை சேர்ந்த கார்த்திக் ( வயது 21 ) ஹரிகரன் ( வயது 23 ) மற்றும் 17 வயது நான்கு சிறார்களை கைது செய்தனர்.


மனைவி நடத்தையில் சந்தேகம் , கொலை செய்து விட்டு தலைமறைவான கணவர்


நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் ( வயது 45 ) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சித்ரா ( வயது 38 ) தம்பதியருக்கு ஜெகதீசன் ( வயது 17 )  தினேஷ் ( வயது 13 ) என இரண்டு மகன்கள் உள்ளனர். பாஸ்கருக்கு சித்ராவின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளது. இதனால் குடித்து விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.


கணவரின் கொடுமை தாங்காமல் , ஓராண்டுக்கு முன் சித்ரா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சமாதானம் செய்து அழைத்து வந்த பாஸ்கர் , ஏழு மாதமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். மீண்டும் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த பாஸ்கர், தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளார்.


வழக்கம் போல் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மகன்கள் இருவரும் , ஒரு அறையில் தூங்கியுள்ளனர். காலையில் மகன் ஜெகதீசன் எழுந்து பார்த்த போது, சித்ரா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு , சடலமாக கிடந்தார். நாமக்கல் போலீசார் தலைமறைவான பாஸ்கரை தேடி வருகின்றனர்.