ஒரு மனிதன் மிகச்சிறந்த மனிதனாக, மிகச்சிறந்த குடிமகனாக இருப்பதற்கு அவனது தந்தை, தாயின் பங்களிப்பை காட்டிலும் அவனை வழிகாட்டும் அவனது ஆசிரியரின் பங்களிப்பே மிக மிக முக்கிய காரணம் ஆகும். படிக்கும் மாணவனாக மட்டுமின்றி நாம் எந்த தொழில் செய்தாலும் நமக்கு சிறந்த குருநாதர் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த துறையில் நம்முடைய பயணம் சரியான இலக்கைச் சென்று அடையாது என்பதே உண்மை. அப்பேற்பட்ட ஆசிரியர்களை நாம் உண்மையாக மதித்தாலே நாம் சிறப்பானவர்களாக திகழ முடியும். அதற்கு பலரை நாம் உதாரணமாக கூறலாம்.



ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி என்பது மிக அவசியம். அந்த கல்வியை அவனை பண்பட்ட மனிதனாக மாற்ற சிறந்த ஆசிரியர் அதை போதிக்க வேண்டியது மிக மிக அவசியம். சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா இன்று இந்தளவிற்கு சிறந்திருப்பதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அப்பேற்பட்ட ஆசிரியர்களின் மாண்பை போற்றும் விதமாக ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்த முதல் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். 




அந்த வகையில் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நல்ல ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அதே போன்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பதும் நடைமுறையாக இருந்து வருகிறது.  அந்த வகையில் 275க்கும்,  மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. 


நம்ப மாவட்டம் காஞ்சிபுரத்தில் விருது பெற்றவர்கள் பட்டியல் தெரியுமா ? 


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நான்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் நான்கு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு மெட்ரிக் பள்ளி ஆசிரியருக்கும் என மொத்தம் 9 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வி

 

1. சொர்ணலட்சுமி - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாலாஜாபாத் ,காஞ்சிபுரம்.

 

2. வசந்தி - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி குன்றத்தூர் ,காஞ்சிபுரம்.

 

3. சோமசுந்தர் - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,காஞ்சிபுரம்.

 

4. சுந்தர்ராஜன் - அரசு மேல்நிலைப்பள்ளி மாணாம்பதி,காஞ்சிபுரம்.


 

தொடக்க கல்வி

 

1. ஷேக் அகமது - வல்லக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,,காஞ்சிபுரம்.

 

2. சுந்தர்ராஜன் - பூதேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,பூதேரி ,காஞ்சிபுரம்.

 

3.சௌ.கீதா - சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,காஞ்சிபுரம்.

 

4. மழலைநாதன் -  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழ்க்கதிர்பூர்,காஞ்சிபுரம்.

 

 

மெட்ரிக் பள்ளி

 

1. நூருல்குதாயா - லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குன்றத்தூர்,காஞ்சிபுரம்.

 

இவர்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.