மருத்துவ காப்பீடு திட்டம்

Continues below advertisement

சென்னை மயிலாப்பூர் பகுதியில் 70 வயதிற்கு மேற்பட்ட  முதியோர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தையும் பாஜக உறுப்பினர் சேர்க்கை திட்டத்தையும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் துவங்கி வைத்தார் .

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன்;

Continues below advertisement

மழை வந்தவுடன் துணை முதலமைச்சர் உடனடியாக ரிப்பன் மாளிகைக்கு சென்று ஆய்வு செய்கிறார். ஆனால் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் செய்யவில்லை கஷ்டப்பட வேண்டியது நாம் தான். மழைநீர் சேகரிப்புக்காக இவர்கள் என்ன செய்துள்ளார்கள் ?

மழைநீர் வடிகால் குறித்து ஒன்றும் தெரியாது

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சருடன் விவாதிக்க தயார் என்று அழைப்பு விடுத்திருந்தார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருடன் நான் விவாதிக்க தயார் என்று கூறுகிறார். இவருக்கு மழைநீர் வடிகால் அமைப்பு பணி மழைநீர் சேகரிப்பு குறித்து ஒன்றும் தெரியாது.மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 85 சதவீதம் கூட நிறைவடையவில்லை. பள்ளிக்கரணை, திருவெற்றியூர் பகுதிகள் மழை நீர் வடிகால் அமைக்கும் வரைபடத்தில் இடம் பெறவில்லை

சென்னை எந்த ஒரு அடிப்படை உள்கட்டமைப்பு வசதியும் இவர்கள் மேம்படுத்தவில்லை சிங்காரச் சென்னை திட்டத்தை பற்றி இன்று கூறவில்லை. முதலமைச்சர் அன்று மேயராக இருக்கும் காலம் முதல் சிங்காரச் சென்னை திட்டத்தை பற்றி கூறுவதாகவும் இவர்கள் கையில் தானே சென்னை உள்ளது ஆனால் ஒன்றும் செய்யவில்லை.

கமல்ஹாசனை மிரட்டி பெயர் மாற்ற வைத்துள்ளனர்

மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது தான் இவர்கள் வழக்கமாக உள்ளது. அதே போன்று உலகநாயகன் கமல்ஹாசனை பெயரை மாற்ற வேண்டும் என அவரை மிரட்டி மாற்ற வைத்துள்ளார்கள். அவரும் திமுக காரர் போல நடந்து கொள்கிறார்.  தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சரியாக செயல்படவில்லை, குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. பள்ளி கட்டிடங்கள்  சரி இல்லை இதையெல்லாம் அந்த துறை அமைச்சர் கவனிக்காமல் அவர் உதயநிதி ஸ்டாலின் புகழை பாடுகிறார்.

மாணவிக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல்

தூத்துக்குடியில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் , தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் பெண்களாகவே இருக்க வேண்டும் குறிப்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் பெண்களாக இருக்க சட்டம் கொண்டு வரவேண்டும்.

திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியதை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ;

80 வருடமாக அவர் கட்சியும் ஆட்சியும் வளர்த்தார்கள் ஆனால் அவரை விட கல்வியில் புரட்சி கொண்டு வந்த காமராஜர்  பெயரை எத்தனை திட்டத்திற்கு வைத்துள்ளார்கள் ? தமிழ் மொழியை வளர்ப்பதாக கூறி கனிமொழியே தான் வளர்த்தார் என கிண்டல் செய்தார்.

கூட்டணியில் பல பேர் சேரலாம் - விலகலாம்

2026 தேர்தல் வருவதற்கு இன்னும் காலம் அவகாசம் இருப்பதாகவும் ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்தால் நல்லது. பாஜக கூட்டணியில் பல பேர் சேரலாம். திமுக கூட்டணியில் இருந்து சிலர் விலகலாம், 2026 தேர்தல் வரும் போது திமுகவே அவர்களின் கூட்டணி பலமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.

யாரை தோற்கடிக்க வேண்டுமோ அதை பொறுத்து கூட்டணி அமையும். திமுக , அதிமுக இரண்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அரசியல் சூழல் பொறுத்து அனைத்தும் மாறும். 2026 - ல் பலமான கூட்டணி அமைய வேண்டும். அனைவரும் சேர்ந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருக்கக் கூடாது அது  உதிரியாக இருந்தால் உதய சூரியனுக்கு வாய்ப்பு வந்துவிடும். தேர்தல் கணக்கு தான் கூட்டணி பாஜக பொறுத்தவரை மாநில கட்சியுடன் ஆலோசனை செய்த பிறகு தேசிய கட்சி முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.