TVK Manadu: தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... 

TVK First Manadu: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள முதல் மாநாடு குறித்த தேதியினை, இன்று அக்காட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவிக்க உள்ளார்

Continues below advertisement

தமிழ்நாட்டில் மிக முக்கிய நடிகர்களின் ஒருவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை, அரசியல் கட்சிக்கு தேவையான அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் கட்டமைத்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த, நகர்வுகள் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கான அடித்தளமாக இருந்தது. 

Continues below advertisement

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு கட்சியை கட்டமைக்கும் பணியிலும் நிர்வாகிகள் முடக்கிவிடப்பட்டனர். 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சிக்கொடி அறிமுகவிழாவின்போது நீங்கள் எதிர்பார்த்தது விரைவில் நிறைவேறும், நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக விஜய் அறிவித்தார். 

முதல் மாநாடு நடைபெறும் இடம் 

நடிகர் விஜய்யின் முதல் மாநாடு மதுரை, மகிழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் நடத்த கட்சி தலைமை முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டது. ஆனால் அதற்கான இடங்கள் கிடைக்காததால் , தற்போது விழுப்புரம் மாவட்டம் வி-சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரியதாக தகவல் வெளியானது.

மாநாடுகள் எப்போது ?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு 23-ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்த விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநாடு நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து 21 கேள்விகள் கேட்கப்பட்டு நோட்டீஸ் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் காத்தமுத்துவிடம் வழங்கினார்.

விஜய் மாநாட்டிற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல் துறையின் 21 கேள்விகளுக்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டி.எஸ்‌.பி அலுவலகத்தில் , நேற்று முன் தினம் தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கினர். காவல்துறை அளித்த கேள்விகளுக்கு, பதில் அளித்த நிலையில் காவல்துறை விரைவில் அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ‌

தேதி அறிவிப்பா ?

இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு தேதியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை சுமார் 11 மணியளவில் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமாக நடைபெறும் இடம் குறித்து தகவலையும் தெரிவிப்பார் என்ற தகவலையும் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. முதல் மாநாடு குறித்த தேதி அறிவித்த பிறகு, நாடு முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Continues below advertisement