துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் தவறாக பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து - நடந்தது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுடன் பாடப்படவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறால் மைக் சரிவர வேலை செய்யவில்லை என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.

Continues below advertisement

தலைமை செயலகத்தில் புத்தாய்வு திட்ட பயிற்சி

Continues below advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்தை அங்கிருந்த அரசு ஊழியர்கள் மூவர் எழுந்து பாடினர். 

அப்போது, கண்டமிதில் என்பதை கண்டம் அதில்  என்றும் புகழ் மணக்க என்பதை ' திகழ் ' மணக்க  என்றும் பிழையுடனும் பாடினர். 

மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால் , திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ' திருநாடும் ' என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிக்காமல் இடைவெளி ஏற்பட்டது. 

இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும் , தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதை பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார் . 

துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன்  

கண்டமிதில்  என்பதை கண்டமதில்  என்றும் புகழ் மணக்க என்பதை ' திகழ் ' மணக்க  என்றும் பிழையுடனும் பாடினர்.

முதல் முறை மைக் சரிவர இயங்காததால் 'திராவிட நல் திருநாடும்...'  என்ற வரியை சரியாக பாடினார்களா என கண்டறிய முடியாத வகையில் அவ்வப்போது பாடியவர்களின் குரல் சிலயிடங்களில் தெளிவாக கேட்காமல் இருந்தது. ஆனால் இரண்டாம் முறை மைக் தெளிவாக இயங்கியதால் பிழைகள் அனைத்தும் முழுமையாகத் தெரிந்தன.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ;

தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 19 பேர் நிறைவு செய்து இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு 6.5 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.  
அடுத்த 2 ஆண்டுக்கு இப் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும். 

தமிழ்தாய் வாழ்த்து தவறாக பாடவில்லை

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடப்படவில்லை, அவர்கள் பாடும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மைக் சரியாக வேலை செய்யவில்லை. எனவே 2..3 இடத்தில் அவர்களது குரல் கேக்கவில்லை. எனவே மீண்டும் சரியாக  பாட வைத்மோம் , நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்டது. தேவையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக  மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிவிடாதீர்கள் என்று கூறினார்.

Continues below advertisement