பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது எனவும், செல்போன் பயன்படுத்துவதால், பணியின் போது கவனச் சிதறல் ஏற்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த உத்தரவில், உதவி ஆய்வாளருக்கு கீழ் பணியில் இருக்கும் காவலர்கள் நிச்சயம் செல்போன்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பணியில் இருக்கும் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளார் காவல்துறை ஆணையாளர் சந்திப் ரத்தோர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், “
காவலர்கள் பணியில் இருக்கும் போது செல்போன்கள் பயன்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் மேற்கோள் காட்டப்பட்ட போதிலும், பணி நேரத்தின்போது பல்வேறு காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி செல்போன்களைப் பயன்படுத்துவதை காண முடிகிறது.
இதன்மூலம், அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து அவர்களின் மனம் திசைதிருப்பப்படுகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. கள சூழ்நிலைகளில், அவர்கள் தங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும், எனவே போலீசார் காவல் பணிகளில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் அமலாக்கம் மிகவும் முக்கியமான கடமையாகும், இது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை அமல்படுத்துதல், மீறுபவர்களை அடையாளம் காண்பது போன்றவற்றிற்கு கவனம் தேவை. செல்போனகள் கவனத்தை சிதறடிக்கும் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை பாதிக்கப்படலாம். இத்தகைய முன்னுரிமை தேவைப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.