Chennai Disaster Management Authority: சென்னை மாநகராட்சிக்கு என தனி பிரத்யேக பேரிடடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தவிரவிட்டுள்ளது.

சென்னைக்கு பிரத்யேக பேரிடர் மேலாண்மை ஆணையம்:

சென்னையில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த பிரத்யேக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  மாநகராட்சி ஆணையர் தலைமையின் கீழ் இந்த ஆணையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், நல அலுவர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, நீர்வளத்துறை பொறியாளர் ஆகியோர் இந்த ஆணையத்தில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சென்னை மாநாகராட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள, ஆணையம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் சிரமங்களை போக்க உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பேரிடர்களை எதிர்கொள்ள இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடாய்படும் சென்னை:

அதிவேகமான நகரமயமாதல் காரணமாக சென்னையில் ஆகிரமிப்பு அதிகரித்து, நீர்நிலைகள் பல குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகளில் போதி விழிப்புணர்வு இன்றி ஏராளாமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு முறை கனமழை கொட்டும்போதும், வீடுகள் வெள்ளக்காடுகளாக மாறுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாம்ல் பொதுமக்கள் வீடுகளிலேயெ முடங்கிவிடுகின்றனர். மழை வெள்ளம் செல்ல வேண்டிய பாதைகளையும் குடியிருப்புகள் அடைத்து இருப்பதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த காட்சிகளை சென்னையில் காண முடிகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

உதவிகள் கிடைப்பதில் சிக்கல்:

வெள்ள பாதிப்புகளில் சிக்கி வீடுகளில் முடங்கிய நபர்களுக்கு பேரிடர் காலங்களில் உதவிகள் கிடைப்பது என்பது பெரும் சிக்கலாக உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் சூழலில் சென்னைக்கு மட்டும் முழு கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் நாட்கணக்கில் கூட அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல தேவைகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பதையும் காண முடிகிறது. இந்த சூழலை தவிர்க்க தான, சென்னை மாநகராட்சிக்கு என பிரத்யேகமான பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் உடனடியாக அரசின் கரங்கள் நீளும் என நம்பப்படுகிறது.