மாண்டஸ் புயலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்தார். திருவான்மியூர் பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து சென்னை காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நிருபர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் மாண்டஸ் புயலால் சென்னையில் கடுமையான பாதிப்புகள் இல்லை என்றும், நிவாரண உதவிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் இந்த இக்கட்டான காலத்தில் களத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.


காசிமேடு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


வங்கக் கடல் பகுதியில் மாண்டஸ் புயல் உருவானதில் இருந்தில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர். மாண்டஸ் புயலில் இருந்து தமிழகம், குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக புயல் பாதிப்பில்க் இருந்து மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படிருக்கிரார்கள். பெரிய அளவில், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த சேதங்களும் இல்லை. சென்னையில் மரங்கள் விழுந்துள்ளன. ஆனாலும், போக்குவரத்திற்கு எவ்வித இடையூறு ஏற்பட்டுவிட இல்லாத அளவில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.


சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு பணி களை மிகச் சிறப்பாக செய்து வருவதாகவும் முதலமைச்சர் அவர்களை பாராட்டி பேசினார்.


புயல் நேரத்தில் களத்தில் பணியாற்றிய பல்வேறு துறை அமைச்சர்கள் பற்றி குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர். “ இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள் குறிப்பாக,  நகர்புறத் துறையின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ள கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  சுப்பிரமணியன், அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், நம் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கல், மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் மின்சார வாரியத்தின் ஊழியர்கள், காவல் துறை, தீயணைப்பு படை சகோதரர்கள் குறிப்பாக தூய்மை பணியாளர்கள் ஆகியோர் சீரமைப்பு பணிகளில் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்டனர என்று நிவாரண பணிகளில் தங்களை ஈடுப்படுத்தி கொண்டவர்களின் செயல்பாடு பாராட்டிற்குரியது.


சீரமைப்பு பணி:


சென்னையில் 17 மாவட்ட ஆட்சியர்கள் மாண்ட புயல் பாதிப்புகளை கண்காணிக்க நிவாணர பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு செயல்பட்டனர். 5000 பணியாளர்கள் நேற்று இரவு முதல் சீரமைப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றன. தற்போது கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடும் பாதிப்புகள் இல்லை:


மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 37 மாவடங்களில் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாநில சராசரியாக 20.08 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. அதிகளவு மழை பெய்தாலும், பெருமளவிற்கு பாதிப்புகள் இல்லாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


புயல்- உயிரிழப்பு:


இதுவரை கிடைத்த தகவல்களின் படி, புயல் பாதிப்புகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 181 குடிசைகள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக சேத விவரங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.


நிவாரண முகாம்கள்:


201 முகாம்களில் ம்3 ஆயிரத்து 163 ஆம் குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 130 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, சுகாதாரமான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழஙக்ப்படும், சேத விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு முழுமையான விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் பதிலளித்தார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.