தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பர்ந்தாமன், ஜே.ஜே. எபிநேசர், ஆர். மூர்த்தி ஆகியோர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.






இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று ‘ஷாஹீத் திவாஸ்’ அல்லது ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் மகாத்மா என்று மரியாதையாக அழைக்கும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நினைவு நாளைக் குறிக்கிறது.


தியாகிகள் தினம்


இந்த தியாகிகள் தினத்தில், ஒடுக்கப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற இந்தியா போராடிய போது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் (ஜனவரி 30) டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக ஜனவரி 30 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. தேசத்தின் தியாகிகளை போற்றும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.










மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை அகிம்சை அணுகுமுறை மூலம் வழிநடத்தினார். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து ஐந்து மாதங்களில், ஜனவரி 30, 1948 அன்று, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்தியரே சுட்டுக் கொன்றார். இதில் காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புது தில்லியில் உள்ள பிர்லா ஹவுஸ் வளாகத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது அவர் சுடப்பட்டார், துப்பாக்கிச் சூடு அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. அவரை சுட்ட நாதுராம் கோட்சே என்பவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் வாசிக்க..


CBSE Board Exam 2023: ஜன.2 முதல் சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வுகள்; வெளியான அறிவிப்பு- விவரம்