ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அந்த பெயருக்குள் உள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அந்த பெயருக்குள் உள்ளனர். மக்களின் கவலைகளை தீர்க்கும் தலைவனாக இருப்பேன். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று கூறினார்களோ அதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கூறியவர் அண்ணா. மு.க.ஸ்டாலின் எனும் நான் நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன். அண்ணா போல பேசத்தெரியாது. கலைஞரை போல் எழுதத் தெரியாது. ஆனால் அவர்களை போல் உழைக்கத் தெரியும்” எனத் தெரிவித்தார்.


 



மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தாள் விழா பொதுக்கூட்ட நிகழ்வில் ..


ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள், உயிரிகளின் பெயர்கள் அடங்கியிருக்கிறது. என்னுடைய உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்ற ஒற்றை வாக்கியத்தில் நம்மை இணைத்தார் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர். அவருக்கு நான் மட்டும் பிள்ளையில்லை. நீங்கள் அனைவரும் அவருக்கு பிள்ளைகள்தான். தந்தை பெரியார் ” ஈ.வே.ராமசாமி ஆகிய நான் திராவிட சமுதாயத்தை மானமும் அறிவும் சமுதாயமாக ஆக்கும் பணியை மேற்போட்டுக்கொண்டு புறப்பட்டார்.  அண்ணாவினால் என்ன சாதித்துவிட முடியும் என்ற கேள்வி எழுந்தபோது, ’அனைத்தையும் இந்த அண்ணாதுரையால் சாதிக்க முடியும் .”என்றுதான் எழுந்து நின்றார் பேரறிஞர் அண்ணா.  தமிழன தலைவர் கலைஞர் ,” தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் என்று தன் தொண்டால் நிறைந்திருக்கிறார். 


மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்கு தொண்டாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன் என்று உறுதியேற்று பொறுப்பேற்றுள்ளேன். என் சக்தியை மீறியும் உழைப்பேன் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் முன் உறுதியேற்றுக் கொண்டார்.


கடந்த வந்த பாதை - நெகிழ்ச்சி


திருமணமான ஐந்தே மாதத்தில் சிறைக்குப் போனேன். பொது வாழ்க்கை என்றால் இப்படிதான் இருக்கும் என்று வசந்த மாளிகைக்கு அனுப்பி வைப்பது போல சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தார் கலைஞர் கருணாநிதி என்று தன் அரசியல் பயணத்தில் கடந்து வந்த பாதை குறித்து நெகிழ்ச்சியுடன் பகிந்துகொண்டார். சிறைச்சாலை தன் அரசியல் பயணத்திற்கான பாசறை என்று அவர் குறிப்பிட்டார்.


இளமை - லட்சியவாதிகளுக்கு வயதாவதில்லை 


மனதில் கொள்கை உறுதியும், லட்சிய தாகமும், அதற்காக உழைப்பதும் அன்றாட பணியாக இருந்தால் வயதாவதில்லை. லட்சியவாதிகளுக்கு வயதாவதில்லை. 


சொல்லாததையும் செய்வதுதான் மு.க.ஸ்டாலின் ஸ்டைல்!


சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்! என்பது கலைஞர் கருணாநிதியின் பாணி. இந்த ஸ்டாலினின் பாணி சொல்லாததையும் செய்வதுதான் என்று பேசியுள்ளார்.


புதிய அரசியலின் தொடக்க விழா மேடை : 


இந்தப் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது நாட்டில் புதிய அரசியலின் தொடக்க விழா மேடையாக இருப்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 


நாடாளுமன்ற தேர்தல் - 2023 -யார் பொறுப்பேற்க கூடாது என்பது முக்கியம்


ஒன்றுப்பட்ட இந்தியாவை வகுப்புவாத ஃபாசிசத்தால் பிளவுப்படுத்தி ஒற்றைத்தன்மை ஏதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கும் பா.ஜ.க. அரசியல் ரீதியிலாக வீழ்த்தியாக வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இதனை நோக்கமாக கொண்டு ஒன்றுதிரள வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும்.


எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பா.ஜ.க. போர் தொடுக்கிறது. அதற்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறும்  நாடாளுமன்ற தேர்தல் நம் கொள்ளை போராட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பாகும். பா.ஜ.க.வை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும்.


ஒருமித்த அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயார் என்று காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானமே எனது பிறந்தாள் பரிசு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.