44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் இன்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெற்ற வருகிறது. மூன்றாவது நாளாக இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்பொழுது நடைபெற்ற போட்டிகளின் முடிவின் அடிப்படையில் இந்திய வீரர் சர்பானி நந்திதா அரிகிருஷ்ணன் ஆகிய மூன்று வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையில் இடுவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது மகளுடன் வந்திருந்தார்.
இதனை அடுத்து செஸ் போட்டியினை அரங்கில் இருந்து கண்டு ரசித்த அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து அரங்கிற்குள்ளே அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சிகளை தனது மகளுடன் கண்டுகளித்தார். மேலும் தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பாராட்டுகளை தெரிவித்தார்.
முன்னதாக அன்புமணி ராமதாஸ் காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே, ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இந்நிலையில் தற்போது 67 கிலோ ஆடவர் எடை தூக்கும் போட்டியில் 300 கிலோ எடை தூக்கிஇந்திய வீரர் ஜெரிமி லால்ரினுங்கா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது: ''பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 67 கிலோ ஆடவர் பளுதூக்கும் போட்டியில் 300 கிலோ எடை தூக்கி தங்கம் வென்ற இந்திய வீரர் ஜெரமி லால்ரினுங்காவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பளுதூக்கும் பிரிவில் இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம். மற்ற போட்டிகளிலும் பதக்கங்களைக் குவித்து 5 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தியா மேலும் முன்னேறுவதற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செக்மேட் 8: செஸ் ஒலிம்பியாடும்.. ஒலிம்பிக்ஸூம்.. என்னென்ன ஒற்றுமை வேற்றுமை?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்