தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் குறுக்கு பாதையில் செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்று வரும் பொதுமக்கள் மீது ரயில் மோதி பலியாகும் அவலம் தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.



 

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ஆறு மணி அளவில் 50 வயது மதிக்க தக்க முதாட்டி ஒருவர் தலை சிதறிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் உதவி ஆணையர் சீனிவாசன் மற்றும் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



 

ஏற்கனவே அதே பகுதியில் கடந்த 28ம் தேதி முதல் நாள் பணிக்கு செல்வதற்காக செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த நிகிதா என்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இரும்புலியூரில் இருந்து பழைய ஜி.எஸ்.டி சாலை செல்வதற்க்கு இரண்டு கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டும் என்பதால் குறுக்கு வழியாக  பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தணடவாளத்தை கடந்து செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் போலீசார் பொதுமக்கள் கடந்து செல்லாதவாறு இருபுறமும் இரும்பு கம்பிகள் மூலம் தடுப்புகளை அமைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.