கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 'One Station One Product' அதாவது ஒரு நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டம் மத்திய ரயில்வே அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.
பாரம்பரியமிக்க, பழமையான உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 'ஒரு நிலையம், ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை அமைக்க ரயில்வே துறை ஏற்பாடு செய்தது. இதன்படி நாடு முழுதும் 5,000 ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்தப் பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்யப்பட்டு மார்ச் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காஞ்சி பட்டு புடவை, தஞ்சாவூரில் பொம்மைகள், திருவனந்தபுரத்தில் கைவினை பொருட்கள், திருசெந்தூர் ரயில் நிலையத்தில் பனை பொருட்கள், பழனி பஞ்சாமிர்தம், திருவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனைப் பொருட்கள், உள்ளிட்ட பனைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் நோக்கம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதாகும். இதில் பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி தொழிலை மேம்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில், விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு விற்பனையாளர்களுக்கு அழைப்பு விடுகப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 |
சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் நிலையம் |
காஞ்சிபுரம் பட்டு, ஆர்கானிக் மிக்ஸ் |
2 | திருவள்ளூர் இரயில் நிலையம் | மூலிகை நலவாழ்வு தயாரிப்புகள், பாரம்பரிய தின்பண்டம் |
3 | அம்பத்தூர் இரயில் நிலையம் | பாரம்பரிய தின்பண்டம், ஆர்கானிக் மிக்ஸ் |
4 | வேளச்சேரி இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், பாரம்பரிய தின்பண்டம் |
5 | சென்னை பூங்கா இரயில் நிலையம் | மர பொம்மைகள், கைவேலைப்பாடு ஆபரணங்கள் & கைத்தறி, பாரம்பரிய தின்பண்டம் |
6 | சென்னை கடற்கரை | பாரம்பரிய தின்பண்டம், ஆர்கானிக் மிக்ஸ் |
7 | கிண்டி இரயில் நிலையம் | தூய்மைப்படுத்தும் திரவங்கள், சணல் பைகள் |
8 | கோடம்பாக்கம் இரயில் நிலையம் | பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் பானங்கள் |
9 | கொரட்டூர் இரயில் நிலையம் | பாரம்பரிய இனிப்பு வகைகள் |
10 | குரோம்பேட்டை இரயில் நிலையம் |
ஆர்கானிக் மிக்ஸ், ஆயுர்வேத எண்ணெய், ஆடும் பொம்மைகள், |
11 | வில்லிவாக்கம் இரயில் நிலையம் |
|
12 | பரங்கி மலை இரயில் நிலையம் | ஆயுர்வேத எண்ணெய், சணல் பைகள், மர பொம்மைகள் |
13 | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் | காஞ்சிபுரம் பட்டு |
14 | சென்னை எழும்பூர் இரயில் நிலையம் |
சணல் பைகள், காஞ்சிபுரம் பட்டு |
15 | பெரம்பூர் இரயில் நிலையம் |
கைவேலைப்பாடு ஆபரணங்கள் & கைத்தறி
|
16 | ஆவடி | சணல் மற்றும் காகித தயாரிப்புகள் |
17 |
தாம்பரம் இரயில் நிலையம் |
ஹெல்த் மிக்ஸ், ஆடும் பொம்மைகள் |
18 |
சேப்பாகம் இரயில் நிலையம் |
ஆர்கானிக் மிக்ஸ், மூலிகை தயாரிப்புகள் |
19 |
நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் |
ஆயுர்வேத எண்ணெய், மர பொம்மைகள் |
20 | திருமயிலை இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், சணல் பைகள் |
21 | திருவான்மியூர் இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், அப்பளம் மற்றும் வடாம் |
22 | மாம்பலம் இரயில் நிலையம் | ஆர்கானிக் மிக்ஸ், ஆயுர்வேத எண்ணெய், மர பொம்மைகள் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரம்:
கைத்தறி வளர்ச்சி ஆணையரால் வழங்கப்பெற்ற அல்லது உரிய மாநில/மத்திய அதிகார அமைப்பினரால் வழங்கப்பெற்ற கைவினைஞர் அட்டை/நெசவாளர் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.
தனிப்பட்ட கைவினைஞர் / நெசவாளர் / கைவேலைப்பாட்டு கலைஞர் ஆகியோர் பழங்குடியினர் கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி ஃபெடரேஷன் லிமிட்டட் உடன் தேசிய கைத்தறி வளர்ச்சி கார்ப்பரேஷன் உடன் / கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆகியவற்றுடன் சேர்ந்து பதிவு பெற்றுள்ளவராக இருப்பது அவசியம்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தில் (PMEGP- Prime Minister's Employment Generation Programme) பதிவு பெற்றுள்ள சுய உதவிக் குழுவினராக இருக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாதவாரக இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட இரயில் நிலையத்தின் மேலாளரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் சென்னை கோட்டத்தின் வர்த்தக வளர்ச்சி பிரிவை (Business Development Unit) தொடர்பு கொள்ள வேண்டும்.
பதிவுக் கட்டணம் ரூ. 1000/- இறுதி செய்யப்படும் தருணத்தில் அந்தந்த நிலையத்தில் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.