சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இயக்குனர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;

Continues below advertisement

இந்திய கடல் பகுதிகளில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகிறது. அந்தமான் கடல் பகுதி மலாக்கா நீரினை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கே அந்தமான் கடல் பகுதிகளில் காற்று அடித்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும் அதே திசையில் நகர்ந்து அடுத்தகட்ட 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

Continues below advertisement

காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்க கடல் பகுதிகளில் நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்க சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக நாளை குமரிக்கடல் மற்றும் இலங்கை தெற்கு வங்க கடல் பகுதிகளில் காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன் பிறகாக அது வலுவடையவும் வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது சுழற்சி அரபிக் கடல் பகுதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்க சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிறது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இது ஒன்றோடு ஒன்றாக இன்ட்ராக்ட் செய்யும் பொழுது குமரிக்கடல் பகுதி சுழற்சியும் மலாக்கா மலேசியா பகுதிகளின் நேரடிய அந்த சூழ்ச்சியும் இணைந்து கூட ஒன்றாக சேர்ந்து நகர்வதற்கான வாய்ப்பு உண்டு. பொறுத்திருந்து அடுத்த சில நாட்களில் அது எவ்வாறு நடக்கும் என்று பார்க்க முடியும்.

குறைவான மழை பெய்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கிறது பெரும்பாலான இடங்களில் தமிழகத்திலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்திருக்கிறது. நான்கு இடங்களில் அதிக கன மழை பெய்திருக்கிறது. 15 இடங்களில் மிக கனமழை 76 இடங்களில் கனமழையும் பதிவாகி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று இடங்களில் அதிகபட்ச மழை பதிவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை என்று பார்த்தால் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி நவம்பர் வரை காலகட்டத்தில் இயல்பு மழை 33 சென்டிமீட்டர் பெய்ய வேண்டும். இன்று வரை பதிவான மழை அளவு 34 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. இயல்பிலிருந்து ஒரு ஐந்து சதவீதம் தமிழகத்திற்கும் புதுவை மற்றும் காரைக்காலுக்கு பதிவாகி இருக்கிறது. அதிக மழைப் பொழிவானது தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டம்.

திருப்பூர் , கரூர் , திண்டுக்கல் , சேலம் பெரம்பலூர் , செங்கல்பட்டு , சென்னை ஆகிய ஏழு மாவட்டங்களில் குறைவான மழை பெய்துள்ளது.

தென்காசி , திருநேல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

இன்று , நாளை 08:30 மணி வரை இரண்டு மாவட்டங்கள் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனம் முதல் மிக கனமழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.இந்த இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலட் விடப்படுகிறது.

ஏனைய தென்கடலோர மாவட்டங்களுக்கு டெல்டா மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. தென் கடலோர மாவட்டங்கள் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி , ராமநாதபுரம் கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

27 ஆம் தேதி தூத்துக்குடி , ராமநாதபுரம் , புதுக்கோட்டை , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் இங்கு கனமழை. மற்ற மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது

கனமழை எச்சரிக்கை குறியீடு மாற்றம்

28 - ம் தேதியை பொருத்த அளவில் வளிமண்டலத்தில் இருக்கின்ற சூழ்ச்சிகளின் மாற்றங்களை கண்காணித்து அடுத்து வரும் நாட்களுக்கான மழை குறித்து எச்சரிக்கை தரப்படுகிறது. நாளை மாறும் மாற்றங்களுக்கு ஏற்றார் போல இந்த கனமழை எச்சரிக்கை குறியீடு செய்யும் மாவட்டங்கள் சில மாறும் வாய்ப்புள்ளது.

28 - ம் தேதி மூன்று மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு மிக கனமழை ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளது.

 29 - ம் தேதி வட கடலோர ஏழு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை ஆரஞ்சு அலர்ட் இந்த மாவட்டங்களுக்கு தரப்படுகிறது.

30 - ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையும் ஆரஞ்சு ஆலர்ட் தந்திருக்கிறோம்.

ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழக கடலோரப் பகுதி குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கேரள கடலோர் பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு தென் வங்க கடல் பகுதிகள் அந்தமான் கடல் பகுதி இந்த பகுதிகளுக்கு இன்றிலிருந்து , அடுத்து வரும் 29ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

முதல் இரண்டு நாட்கள் 24 மற்றும் 25 நவம்பரில் சூறாவளி காற்று கடற்பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதற்கு அடுத்த மூன்று தினங்கள் 26, 27, 28 மற்றும் 29 சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது