சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முதலே கனமழை பெய்து வருவதால் நீர் ஆதாரமாக இருக்கக்கூடிய முக்கிய ஏரிகளில் நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்


செம்பரம்பாக்கம் ஏரி


செம்பரம்பாக்கம்ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3645 மி கன அடியில், தற்போது 2403 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 1146 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியிலிருந்து 174 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மி கன அடியில் தற்போது 2178 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து 258 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு, ஆன 1081 மி.கன அடியில் 428 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு நீர் வரத்து 12 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.


பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி கனடியில் தற்போது 1257 மி கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 330 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவான 500 மி கன அடியில் தற்போது 425 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.


எங்கெங்கு எவ்வளவு மழை


சென்னையில் அதிகப்படியாக மினம் பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


நந்தனம் மற்றும் தரமணியில் 12 செ.மீ மழை பெய்துள்ளது. 


செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.


ஜமீன் கொரட்டூரில். 8.4 செ.மீ மழை பெய்துள்ளது. 


பூந்தமல்லியில் 7.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


சென்னையில் நேற்று அதாவது ஜூன் 18- ஆம் தேதி இரவு முதல் கனமழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது. அதேபோல் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து இந்த நான்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் சென்னையில் தரையிரங்கவேண்டிய விமானங்கள், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதாலும், காற்றுடன் கனமழை பெய்து வருவதாலும் துபாய், தோஹா, அபுதாபி, லண்டன், ஷார்ஜா, கொழும்பு, மஸ்கட் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.