St.Thomas Mount Railway Station Redevelopment Project: இன்று பரங்கிமலை ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
சென்னை புறநகர் ரயில் சேவை - Chennai Electric Train
சென்னையின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. மிகவும் குறைந்த விலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், மின்சார ரயில் போக்குவரத்தை பயன்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இடையே மின்சார ரயில் போக்குவரத்து வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தில், பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர்.
பரங்கிமலை ரயில் நிலையம் - St Thomas Mount Railway Station
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தில், மிக முக்கியமான ரயில்வே நிலையமாக பரங்கிமலை ரயில் நிலையம் (செயிண்ட் தாமஸ் மவுண்ட்) இருந்து வருகிறது. சென்னையில் உள்ள முக்கியமான வணிகங்கள் நடைபெறும் பகுதிக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து செல்ல முடியும் என்பதால், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பரங்கிமலை ரயில் நிலையம் அருகே புகழ் பெற்ற செயிண்ட் தாமஸ் சர்ச் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவு பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையின் மெட்ரோ போக்குவரத்து இணைக்கக்கூடிய, ரயில் நிலையமாகவும் உள்ளது. மெட்ரோவை பயன்படுத்த விரும்புபவர்கள், பரங்கிமலை ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து, சென்னை விமான நிலையம் மெட்ரோ மூலம் சென்னையின் பிற பகுதிக்கு செல்கின்றனர்.
தலைகீழாக மாறிய பரங்கிமலை ரயில் நிலையம்
தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்தை 201 மின்சார ரயில்கள் கடந்து செல்கின்றன. தொடர்ந்து இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருங்காலங்களில் கூடுதலாக, இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் நிலையத்திற்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
பரங்கிமலை ரயில் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்த, தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் வகையில், "அம்ரித் பாரத் " என்ற ரயில் நிலையின் திட்டத்தை மேம்படுத்தும் திட்டம் கையில் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தின் பணிகள் முழு வீட்டில் நடைபெற்ற வந்தன. பரங்கிமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த சுமார் ரூபாய். 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நிறைவடைந்துள்ளன
சிறப்பம்சங்கள் என்னென்ன? Key Features Of St Thomas Mount Railway station Redevelopment
பயணிகளின் வருகை மற்றும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் முன் பகுதிகள், புதிய டிசைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை கவரும் வகையில் வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நவீன சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பாறை அமைக்கப்பட்டுள்ளது.
புதிய புக்கிங் அலுவலகம் மற்றும் நவீன வசதிகளுடன் புக்கிங் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நடைமேடைகளை பொருத்தவரை, கூடுதலான இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் இடமும் அதிகரிக்கப்பட உள்ளது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில், டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இன்று திறப்பு விழா
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் தற்போது முழு பணிகள் முடிவடைந்துள்ளதால், இன்று இந்த ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது. காணொளி காட்சி வழியாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.