தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பராமரிப்பு பணி காரணமாக மாதத்திற்கு ஒரு முறை மின்தடை ஏற்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக, ஒவ்வொரு பகுதிகளுக்கும் மாதம் ஒரு முறை மின்தடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் நாளை ( 23-05-2025) அன்று பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் என்ன ?

சென்னையை பொறுத்தவரை நாளை மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. டுமின் குப்பம், சாந்தோம் நெடுஞ்சாலை, முல்லைமா நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

மந்தவெளி சாலை, மந்தவெளி ஐந்தாவது குறுக்கு தெரு, வெங்கடேச அக்ரஹாரம், கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, பிச்சுப் பிள்ளை தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

சித்திரை குளம் வடக்கு, நடுத்தெருநியூ தெரு,கேசவ பெருமாள் சன்னதி தெரு, வி.சி கார்டன் தெரு, ஆர்.கே. மட் சாலை,  நல்லப்பன் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னையில் எவ்வளவு நேரம் மின்தடை இருக்கும் ?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆவடியில் நாளை எங்கெங்கு மின்தடை ?

அம்பேத்கர் தெரு, எம்.சி.ராஜா தெரு, மிட்டனமல்லி பாடசாலை தெரு, வள்ளுவர் தெரு, ராஜீவ்காந்தி நகர் 1 முதல் 8வது தெரு, பிருந்தாவன் நகர் 1 முதல் 5வது தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது

ஆவடியில் நாளை மின்தடை எப்போது ?

ஆவடியை பொறுத்தவரை காலை 9:00 மணி முதல் மதியம் மூன்று மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.