நாடு முழுவதும் சுமார் 100 நாட்களுக்கு மாற்றமின்றி விற்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதேபோல வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 965.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, பல்வேறு கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில்  பெட்ரோல், டீசல்,  சிலிண்டரை தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை விலை திடீரென உயர்த்தப்பட்டது. சென்னையில் 19 கிலோ உள்ள வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 268.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை 2406 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம் 14.2 கிலோ உள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல், 965.50 ரூபாயாக நீடிக்கிறது.



இதனால், ஹோட்டல் நடத்துபவர்களுக்கு செலவு அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் விரும்பி பருகும் டீ, காபி போன்ற பானங்களின் விலை அதிகரிக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார், ”ஹோட்டல்களுக்கான உணவு பொருட்கள் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டீ, காபி, இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வு பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.


டீ விலை 2 ரூபாய், காபி விலை 3 ரூபாய், இட்லி, பூரி, பொங்கல் போன்ற டிப்பன்கள் 5 ரூபாய், தோசை, புரோட்ட போன்ற உணவுகள் 10 ரூபாய், பிரியாணி, சாப்பாடு விலை 20 ரூபாய் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: RRR Box Office: எந்திரன் 2.0 லைஃப்டைம் வசூல்... 10 நாட்களில் முறியடித்து கெத்துக்காட்டிய ஆர்ஆர்ஆர்! இவ்வளவு கோடியா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண