ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழுவினர், விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழுவினர், விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்துவதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 

தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு  நடை பயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வந்த நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலன் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

 

இந்த சிறப்பு புலன் விசாரணைக் குழு சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. 

விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை சிறப்பு புலன் விசாரணைக் குழு பல்வேறு வகையில் துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குனர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகார் மனுவில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழு, நள்ளிரவு நேரங்களில் பலரை விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக அடைத்து வைப்பதாகவும், குற்ற வழக்கு விசாரணையில் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி சிறப்பு புலன் விசாரணை குழுவினர்  செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணைக் குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணித்து மனித உரிமை  மீறலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 



மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளை வரும் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.















 

சென்னை கோவை மாநகராட்சிகளில்  டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால விதித்திருந்த நிலையில் மனுக்கள் மீதான விசாரணை  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.அப்போது எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜூ வெளிநாடு சென்று உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிபதிகள், வழக்கை ஒத்திவைக்க முடியாது என தெரிவித்தனர்.இன்றே விசாரணையை தொடங்கலாம் என தெரிவித்தனர்.

 

இதையடுத்து முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில்  இன்னொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே ஆஜராகி,இந்த வழக்கில் ஏற்கனவே ஆரம்பகட்ட விசாரணைக்கு காவல்துறை அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

அதனடிப்படையில் விசாரணை அதிகாரியாக பொன்னி நியமிக்கப்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையில் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக  ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினார்.முதலில் ரிட் வழக்கை விசாரித்துவிட்டு குற்ற வழக்கை விசாரிக்க வேண்டும்  குற்றா வழக்கில் தான் ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

 

எனவே வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் நாளை ஒத்திவைப்பதாகவும் நாளை வழக்கை நடத்துங்கள் என்று  தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் ஒப்புதலுடன்தான் இன்று ஒத்திவைப்பட்டதாகவும் தற்போது தள்ளிவைக்க கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். 

 

பின்னர் வழக்கு விசாரணையை வரும் 27 ம் தேதி ஒத்திவைத்தனர். ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையும் நீட்டித்து உத்தரவிட்டனர்