சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, அவ்வப்போது சில வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று(17.03.25) 24 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
காலை 5.40, 8.35, 10.15 ஆகிய நேரங்களில் சென்னை மூர் மார்கெட் - சூலூர்பேட்டை இடையேயான பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 8.10 மணிக்கு சூலூர்பேட்டையிலிருந்து நெல்லூர் வரை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் சென்னை மூர் மார்கெட் - கும்மிடிப்பூண்டி இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 9.40 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்த கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர் மார்க்கத்திலும் ரயில்கள் ரத்து
இதேபோல், 9.55, 11.25, 12.00, 1.00 ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை மூர் மார்கெட் வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 10.00, 11.45, 12.35, 1.15 ஆகிய நேரங்களில் சூலூர்பேட்டையிலிருந்து சென்னை மூர் மார்கெட் வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 10.20 மணிக்கு நெல்லூரிலிருந்து சூலூர்பேட்டை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலை 10.55 மணிக்கு கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை கடற்கரை வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள்
காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில், சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், மதியம் 3.00 மணிக்கு கும்மிடிப்பூண்டியிலிருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில், கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக சில சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,
காலை 9.00 மணிக்கு சென்னை மூர் மார்கெட் - பொன்னேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
காலை 9.30 மற்றும் 10.30 ஆகிய நேரங்களில் சென்னை மூர் மார்கெட் - மீஞ்சூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
காலை 11.35 மணிக்கு சென்னை மூர் மார்கெட் - எளாவூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எதிர் மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள்
காலை 11.56 மற்றும் மதியம் 1.31 ஆகிய நேரங்களில், மீஞ்சூர் - சென்னை மூர் மார்கெட் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பிற்பகல் 12.18 மணிக்கு பொனேரியிலிருந்து சென்னை மூர் மார்க்கெட்டிற்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது.