சென்னை புறநகர் பகுதியில் இருந்து, சென்னைக்குள் இருக்கும் பகுதிகளுக்கு குறைந்த செலவில், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக தாம்பரம் முதல் கடற்கரை சாலை வரை உள்ள மின்சார ரயில்கள் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லக்கூடிய மின்சார ரயில்களை பயன்படுத்தி சென்னைக்குள் இருக்கும் பகுதியில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 





இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35 மணிக்கும், 10.45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் வரும் 23, 24ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை முதல் 24ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

 



இதேபோல், கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30 மணிக்கும், 10 மணிக்கும், 11 மணிக்கும் இயக்கப்படும் ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணிக்கும், 11.40 மணிக்கும், 11.59 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் வரும் 23, 24ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண