கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில்..
சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் ஏஞ்சல் (29), இவரது தாயார் எஸ்தர் (51), இவர் கடந்த, ஆறு மாதத்திற்கு முன்பு (26-05-2022) முதல் காணாமல் போனதாக ஜூன் 8ம் தேதி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்தர் மகள் ஏஞ்சல் கொடுத்த, புகாரின் பேரில் போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில், ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று, ஒரு பெண்ணின் உடல் அழகிய நிலையில் எலும்பு கூடாக , கோவிலாஞ்சேரி காட்டுப்பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த செல்போன்..
அதன் பேரில் அங்கு சென்று பார்த்த போது சிவப்பு நிற மேலாடை, மற்றும் சந்தன நிற புடவை இருந்தது. அதன் அருகில் கைப்பை ஒன்றில் வீட்டு சாவியும் இருந்தது. ஏஞ்சலை அழைத்து இதனை காண்பித்தபோது தனது தாய் என அடையாளம் காட்டினார். அதன் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து, வந்த நிலையில், எஸ்தர் பயன்படுத்திய செல்போன் பயன்பாட்டில் இருந்தது. அதனை கண்டறிந்த போலீசார் செல்போன் பயன்படுத்தி வந்த நபரை அழைத்து வந்து விசாரித்தனர்.
கழுத்தில், காலை வைத்து கொலை..
விசாரணையில் மதுரப்பாக்கத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் தான் செல்போனை கொடுத்ததாக செல்போன் பயன்படுத்தி வந்த நபர் விசாரணையில் கூறியுள்ளார். அதன் பேரில் லோகநாதனை சேலையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஈடுபட்ட விசாரணையில் மது அருந்த பணம் தேவைப்பட்டதால், காட்டுப்பகுதியில் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த கைப்பையை பிடிங்க முயன்ற போது அவர் கூட்டலிட்டுள்ளார். அதனால் அவரை கீழே தள்ளி கழுத்தில், காலை வைத்து கொலை செய்து விட்டு, 700 ரூபாய் பணத்தை திருடிச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் சம்பவம் நடைபெற்றபொழுது, லோகநாதன் மது போதையில் இருந்துள்ளார். மது போதையில் மேலும் மது குடிப்பதற்காக, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போனை தடயமாக வைத்து, அடையாளம் தெரியாத நபரை கைது செய்து சிறையில் அடைத்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்