தாம்பரம் Yard-ல் மேம்பாட்டு பணிகள் தொடர இருப்பதால் மின்சார ரயில்கள், விரைவு ரயில் சேவையில் மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது வரும் `15-ம் தேதி முதல் 18-ம் (18.08.2024) தேதி வரை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விரைவு ரயில்களின் சேவை ரத்து:


ஆக.,15-ம் தேதி முதல் ஆக.,`18ம் தேதி வரை விரைவு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • ரயில் எண். 06028 விழுப்புரம் - தாம்பரம்  MEMU 

  • ரயில் எண்.06726 விழுப்புரம் - மேல்பருவத்தூர் MEMU 

  • ரயில் எண்.06722 - மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை MEMU 

  • ரயில் எண். 06026, பாண்டிச்சேரி - சென்னை எழும்பூர் MEMU 

  • ரயில் எண். 06025. சென்னை எழும்பூர் - புதுச்சேரி MEMU

  • ரயில் எண். 06721. சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் MEMU

  • ரயில் எண். 06725. மேல்மருவத்தூர் - விழுப்புரம் MEMU

  • ரயில் எண். 06027. தாம்பரம் - விழுப்புரம் MEMU 2 (15.08.2024 - 17.08.2024 வரை ரத்து செய்யப்படுகிறது.)
     




ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி மதியம் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த தாம்பரம் யார்டில் சிக்னல் மேம்பாடு உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவு ரயில்களை பொருத்தவரை 27 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






புறநகர் மின்சார பொருத்தவரை, சென்னை கடற்கரை தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 63 மின்சார ரயில் சேவை ஆக.14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மின்சார ரயில் சேவை ரத்து ஆக.18-ம் தேதி மதியம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 




மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டால் பொதுமக்களின் பயணத்திற்கு சிக்கல் இல்லாமல் இருக்கும் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.