1. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கிளைச்சிறையில் வீரளூர் கலவரத்தில் கைதானவர்கள் உட்பட 10 கைதிகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஆரணி இந்தியன் வங்கியில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

2. சென்னையில் கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே மருந்து 'டெலிவரி' செய்ய, கூட்டுறவு துறை ஆயத்தமாகி வருகிறது.



 

3. குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பைக் கண்டித்து காஞ்சிபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

 

4.  காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடி  தியாகுவை ஹரியானா மாநிலத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இதனை ஏற்ற அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தியாகு மீது அறுபத்தி மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

5. கடலூரில் திருமணத்தையொட்டி நடந்த டிஜே நிகழ்ச்சியில், மணமகள் நடனமாடுவதற்கு மாப்பிள்ளை உள்பட அவரது வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

6.  வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்வுகளை ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 



7. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து  விபத்து. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

 

8. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில், மறைந்த முதல்வர் கருணாநிதி திருத்தங்கள் செய்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்ததை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

9. அதிமுக ஆட்சியின்போது அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.



 

 

10.சென்னை விமான நிலையத்தில், ரூ.7 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் ரூ 69.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர பொருள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.