1. வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே, புதிதாக கட்டப்பட உள்ள பாலத்திற்கு அருகில், தற்காலிக மாற்றுப்பாதை மற்றும் அணுகுச்சாலை அமையவுள்ள இடத்தில், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று, ஆய்வு செய்தனர்.

 

2. காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், காஞ்சிபுரம் பல்லவன் நகரில் வங்கி தொடர்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது.அனைத்து வகையான வங்கிகளின் சார்பில், ஸ்டால் அமைத்து, வங்கியின் செயல்பாடுகள், கடன் விபரங்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.கலெக்டர் ஆர்த்தி விருந்தினராக பங்கேற்ற, கடன் கேட்டு விண்ணப்பம் செய்த நபர்களுக்கு 1,834 பேருக்கு, 113 கோடி ரூபாய் வழங்கினார்

 



3.  தாம்பரம் அருகே சாலை விபத்தில் தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

4. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1900- க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுவார்கள். அதனால் நவம்பர் 5 ஆம் தேதி சந்தைக்கு காய்கறிகள் வராது. அதன் காரணமாக சந்தைக்கு விடுமுறை விட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



5. அரசு மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

6. நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக அம்மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

7. தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



8. புற்றுநோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கைதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சிவராமன், 56. அவரை, கடந்த மார்ச் மாதம், கொலை வழக்கு தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து, புழல் விசாரணை சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில், பித்தப்பை புற்றுநோய் காரணமாக, கடந்த, 6ம் தேதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6:00 மணி அளவில் இறந்தார்.

 

 

9. எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டு சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் கட்ட நேரிடும் என, ரயில்வே பாதுகாப்பு படையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.


 

10. நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சந்தேக மரணம் தொடர்பாக, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மனித உரிமை ஆணையத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.



பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர



யூடிபில் வீடியோக்களை காண