1. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் நாளைஇன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. செங்கல்பட்டு மாவாட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 150 எம்.எல்.டி. உற்பத்தி திறன் கொண்ட 2-வைத்து அழகு நெம்மேலியில் அமைய உள்ளது. 2-வது அலகின் கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
4. சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா மீது 5 வழக்குகள் உள்ள நிலையில், 2வது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அரசு அலுவலர்களை தரக்குறை வாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
6. காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 2,02,300 பறிமுதல் செய்தனர்.
7. திருவள்ளூரில் விவாகரத்து கிடைக்காததால், பிரபல திருமண தகவல் மையத்தில், மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டுமென பதிவு செய்த கணவர் கைது.
8. கொளத்தூர் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமராவில் இன்சுலேஷன் டேப் ஒட்டி ராஜேஷ் என்ற இளைஞர் மறைத்துள்ளார். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற போது ரோந்து போலீசார் பார்த்து கைது செய்தனர்.
9. கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி பிரசன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
10 . சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இன்று சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி மதுரவாயில் பகுதி, திருவொற்றியூர் பகுதி, சோத்து பெரும்பேடு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன் மின்சாரம் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.