1. காஞ்சிபுரம் அருகே தனியார் ஃபைனான்ஸில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக்கோரி ஊழியர்கள் தந்த நெருக்கடி தாங்கமுடியாமல், மாற்றுத்திறனாளி விவசாயியொருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பைனான்ஸ் ஊழியர்கள் அமர்நாத், கிருஷ்ணா, சரத்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


 

2. தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில், கல்லுாரி மாணவியை குத்தி கொலை செய்த நபரை, போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

 

3. சென்னை புரசைவாக்கத்தில் தனியாா் வங்கியில் ரூ.10 கோடி போலி காசோலை கொடுத்து மோசடி செய்ய முயன்றதாக 9 போ கைது செய்யப்பட்டனா்.

 

4.  நகா்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

 

5.  பள்ளிகள் திறக்கப்பட்டதும் மதிய உணவு திட்டம் உடனடியாகத் தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

6.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்னாமலை, திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


7. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா அலுவலகம் என 12 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனையில் 11 கிலோ தங்கம் 15.25 கிலோ சந்தன மர பொருட்கள் 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

8 . காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

 

9. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தோசைக் கல்லால் அடித்து பாட்டியை கொன்றுவிட்டு தலைமறைவான பேரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

 

10 . அந்தமான் புறப்பட்ட ஏர் இந்திய விமானத்தில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 117 பயணிகள் உயிர் தப்பினர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X