SIR பணி - சென்னையில் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கம்

Continues below advertisement

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலம் நடைபெற்று வந்த தீவிர வாக்காளர் திருத்தம் (SIR ) பணிகள் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். இதில் சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், சார் பணிகளில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 35% நீக்கப்பட்டுள்ளனர்.

மூன்றில் ஒரு பகுதியினர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 14,25,018 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக 12,22,164 பேர் இடம் மாறியவர்கள் என்பதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

அதைத் தொடர்ந்து , உயிரிழந்ததாக 1,56,555 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே போல தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்று 27,328 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இரட்டை பதிவு என்ற முறையில் 18,772 பேரும் , மற்ற காரணங்கள் என 199 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தொகுதி வாரியாக 

1. ராதாகிருஷ்ணன் நகர் ( RK Nagar ) ;

SIR - க்கு முன்பு - 2,35,272

SIR - க்கு பின்பு - 1,78,356

2. பெரம்பூர் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,97,526

SIR - க்கு பின்பு - 2,00,181

3. கொளத்தூர் தொகுதி ;

SIR - க்கு முன்பு - 2,90,653

SIR - க்கு பின்பு - 1,86,841

4. வில்லிவாக்கம் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,40,466

SIR - க்கு பின்பு - 1,42,706

5. திரு.வி.க நகர் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,23,571

SIR - க்கு பின்பு - 1,64,528

6.எழும்பூர் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 1, 97,465

SIR - க்கு பின்பு - 1,22,607

7.ராயபுரம் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 1,98,576

SIR - க்கு பின்பு - 1,46,865

8.துறைமுகம் தொகுதி ;

SIR - க்கு முன்பு - 1,80,341

SIR - க்கு பின்பு - 1,10,517

9.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

SIR - க்கு முன்பு - 2,40,087

SIR - க்கு பின்பு - 1,50,846

10. ஆயிரம் விளக்கு தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,38,374

SIR - க்கு பின்பு - 1,41,393

11.அண்ணாநகர் தொகுதி ;

SIR - க்கு முன்பு - 2,80,422

SIR - க்கு பின்பு - 1,62,135

12. விருகம்பாக்கம் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,85,947

SIR - க்கு பின்பு - 1,75,123

13.சைதாப்பேட்டை தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,73,717

SIR - க்கு பின்பு - 1,86,489

14. தி.நகர் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,35,497

SIR - க்கு பின்பு - 1,39,498

15. மயிலாப்பூர் தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 2,69,260

SIR - க்கு பின்பு - 1,81,592

16. வேளச்சேரி தொகுதி ; 

SIR - க்கு முன்பு - 3,17,520

SIR - க்கு பின்பு - 1,89,999