காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யும் கூலிப்படைகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

 

பணத்திற்காகவும்,  அதிகாரத்திற்காகவும்

 

தொழிற்சாலை நிறைந்த மாவட்டமான, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இதில் இரும்பு கழிவுகளை எடுப்பதற்கு ஒருவருக்கு ஒருவர் போட்டியில் அவ்வப்போது கொலை முயற்சி, ஆள் கடத்தல் கொலை என பல்வேறு சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

 



அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.பி.ஜி. குமரனை மர்மகும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய சகோதரரான பிஜேபி மாநில பட்டியலின தலைவராக இருந்த  பி.பி.ஜி. சங்கரை காரில் வழிமறித்து வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்தது. இதேபோன்று மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் வெங்கடேசனை வெடிகுண்டு வீசி படுகொலை செய்தது. அவ்வப்போது வெடிகுண்டு வீசி கொலை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

 

திமுக பிரமுகர்

 

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோமினிக் பெண் ஊராட்சி மன்ற தலைவர் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் ஆல்பர்ட், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக  இளைஞரணி பொறுப்பாளராக உள்ளார். இவர் அங்கு இருக்கக்கூடிய 10 -க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை கழிவுகள் எடுக்கும் பணி செய்து வருகிறார். மேலும் இவர் மீது  கொலை மிரட்டல் உள்ளிட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 



 

வெடிகுண்டு வீசி படுகொலை

 

இந்தநிலையில், நேற்று இரவு ஆல்பர்ட் தற்போது எச்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை முன்பாக இருசக்கர வாகனத்தில், அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் வெடிகுண்டு வீசி முகம் மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதனை அடுத்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.  வெடிகுண்டு வீசிய நபர்கள் யார் கூலி கும்பலா அல்லது இவர்களுக்கு தொடர்புடைய நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



கூலிப்படைகளால் அரங்கேறும் கொலைகள்

 

இதில் யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் வெடிகுண்டு வீசி பயிற்சி எடுக்கும் காட்சிகளும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் இளைஞர்கள், இத்தனை படுகொலை சம்பவங்களிலும் குறிப்பிட்ட கூலி கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு அங்கு அங்கிருந்து தப்பி விடுவார்கள். அதனை அடுத்து , வேறு ஒரு நபர்கள் இந்த வழக்கில் தொடர்புடைய தாக கூறி சரணடைவார்கள் என்பது வாடிக்கையாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெடிகுண்டு தயாரித்து வீசி படுகொலை செய்யும் சம்பவம் அரங்கேறி வருவதால், இதனை போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். குட்டி ரவுடியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வளம் வந்திருந்த வினோத் மற்றும் தினேஷ் , சமீபத்தில்  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் என்கவுண்டர் மூலம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது