திமுகவிற்கு ஆதரவாக கமல்ஹாசன், சினேகன் - சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி

திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை குறித்து தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகளை செய்து வரும் தனக்கு திமுக சார்பாக பல குடைச்சல்கள் ஏற்படுகிறது.

Continues below advertisement

கவிஞர் சினேகனின் குற்றச்சாட்டுக்கு சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, 7 நாட்களுக்குள் ஆதாரத்தோடு விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அப்படி தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Continues below advertisement

கடந்த 5 ஆம் தேதி  கவிஞர் சிநேகன், பாஜக பிரமுகரும் சின்னத்திரை நடிகையுமான  ஜெயலட்சுமி மீது  சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த பொய் புகார் சம்பந்தமாக, அவர் தரப்பு விளக்கத்தை சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னுடைய தரப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து வாட்ஸ் அப் பதிவுகளை பதிவிட்டு வரும் எனக்கு திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கமல்ஹாசனும் சினேகனும் பாஜக மகளிர் தொண்டர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தனது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை குறித்து தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகளை செய்து வரும் தனக்கு திமுக சார்பாக பல குடைச்சல்கள் ஏற்படுவதாகவும்,  சினேகன் கூறும் குற்றச்சாட்டை போல் அவர் தரப்பிலிருந்து தனக்கு எந்த விதமான தொலைபேசி அழைப்பு கடிதமோ வழக்கறிஞர் மூலமாக மனு எதுவும் வரவில்லை என ஜெயலட்சுமி கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், திமுகவும் மக்கள் நீதி மையம் வேறு வேறு இல்லை இரண்டும் ஒன்றுதான் என்றார். கமல்ஹாசனுக்கு தென் சென்னை மாவட்ட எம்பியாக பொறுப்பு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்கிற புதிய சர்ச்சையையும் தற்பொழுது சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி  கிளப்பியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola