சர்ச்சைக்குரிய பெண் சாமியார் அன்னபூரணியிடம் தீட்சை பெற்ற அவரது பக்தரின் ஆன்மிக அனுபவங்கள் குறித்த பதிவு, அன்னபூரணியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
எழுந்த குண்டலினி, தீர்ந்த குழப்பம்
அதில், “நாதம் ஓசை கேட்பது, சக்கரங்கள் சுழலுதல், குண்டலினி மேல் எழுதல், ஆயிரம் தாமரை மலர்தல், உள் சுவாசம், மனம் கடந்த நிலை, அருவமாக உணர்தல் ஆகிய அனைத்து அனுபவங்களையும் அம்மா உணர்த்தினார்கள்.
எதிர்காலம் குறித்த கவலை மற்றும் குழப்பங்கள், மனச்சோர்வு, என்னைப் பற்றிய நிறைய கேள்விகள் இது போன்ற அனைத்து மனமயக்கங்களில் இருந்தும் என்னை விடுவித்து அம்மா தெளிவை அருளினார்கள். சூழல் எதுவாயினும் மனதார ஏற்றுக் கொண்டு அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு எளிமையாக வாழும் மனப்பக்குவத்தை பெற்றுள்ளேன்.
ஃபுல் ஃபர்னிஷ்ட் வீடு அருளிய அன்னபூரணி
கொரோனா காலத்தில் கணவருக்கு வேலை இழக்க நேரிட்டது. அப்போது அம்மாவிடம் வேண்டிய போது கணவருக்கு முன்பைவிட மேல் பதவி, ஊதியத்துடன் அம்மா வேலை அமைத்து கொடுத்தார்கள்.
அம்மா தீட்சை கொடுத்தது முதல் பதற்றத்தினால் ஏற்படும் தலைவலி, மைக்ரேன் உபாதைகள் நீங்கியது. வீடு வாங்க வேண்டும் என்ற நிலையில் அம்மாவிடம் ஒப்படைத்த சில நாள்களில் அம்மா 2bhk fullfurnished house அருளினார்கள்.
குழந்தைக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டது. அப்போது அம்மாவிடம் உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தேன், அம்மா, கருணையால் என்னையும் என் குழந்தையையும் பாதிப்பிலிருந்து பாதுகாத்து நலம் அருளினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மீம்களுக்கு அசராத அன்னபூரணி அரசு
தான் தான் ஆதிபராசக்தி அம்மா எனக் கூறி கடந்த 2021ஆம் ஆண்டு முடிவில் எங்கிருந்தோ திடீரென முளைத்த பெண் சாமியார் அன்னபூரணி, அவரது அருள் பாலிக்கும் வீடியோக்களால் சமூக வலைதளங்களில் ஓவர் நைட்டில் ட்ரெண்ட் ஆனார்.
தொடர்ந்து ஜனவரி 1ஆம் தேதி அன்னபூரணி திவ்யதரிசனம் தருவதாகவும் பக்தர்கள் விழாவுக்கு வருகை தருமாறும் கூறிய நிலையில், கரோனா காலத்தில் நடத்தப்படவிருந்த இந்நிகழ்ச்சிக்கு காவல் துறை தடை விதித்தது.
இந்நிலையில், அன்னபூரணி குறித்த பேக் கரவுண்ட் சோதனையில் இறங்கிய மீம் க்ரியேட்டர்களின் கண்களில், ’சொல்வதெல்லாம் உண்மை’ எனும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் பிரபல நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட வீடியோ விழுந்தது.
இந்த வீடியோவைத் தொடர்ந்து கடும் விமர்சனங்களையும் கேலியையும் சந்தித்த போதிலும் அன்னபூரணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பக்தர்களுக்கு நேரிலும், யூடியூபிலும் அருள்பாலித்து சொற்பொழிவாற்றி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்