ஒரே நாளில் காவல் நிலையங்களைச் சுத்தம் செய்யும் நோக்கத்தின் ஒரு பகுதியாக கைவிடப்பட்ட சுமார் 1000 வாகனங்களை சென்னையில் உள்ள காவல் நிலையங்கள் அப்புறப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 


காவலர்கள் தங்கள் பணியிடத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கு அதிக முயற்சி எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதன்கிழமை அன்று  106 காவல் நிலையங்களில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் 978 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த வாகனங்களின் உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டன.


குற்றவியல் சட்டம் பிரிவு 41ன் கீழ், 364 வாகன உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வேறுபல வழக்குகள் தொடர்பாக இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 4 ஆண்டுகளில் சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் துப்புரவுப் பணியை போலீஸார் மேற்கொண்டிருப்பது இது இரண்டாவது முறையாகும்.


ஏறக்குறைய அனைத்து காவல் நிலைய கட்டிடங்களும் கட்டப்பட்டதில் இருந்து இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை என்கிறார் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியது. பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகைகளுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர் ஆகியோரது அறைகள் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் எப்படி சுத்தம் செய்யப்படும் என்பதை விளக்கினார்.


முன்னதாக, சென்னையில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மாண்டல் புயல் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்ட இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்‌ கிழமை பாடவேளையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மாண்டஸ்‌ புயல்‌ மழையின்‌ காரணமாக 09.12.2022 அன்று சென்னை மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்பட்டது.


அப்பணி நாளினை ஈடு செய்திடும்‌ பொருட்டு, 17.12.2022 அன்று (சனிக்‌ கிழமை) சென்னை மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து வகை உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளும்‌ வெள்ளிக்‌ கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி செயல்படவேண்டும்‌ என அறிவிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


மாண்டஸ் புயலுக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை


மாண்டஸ் புயல்க்காலில் இருந்து 270 கி.மீ. கிழக்கு- தென் கிழக்கே மற்றும் சுமார் 350 கி.மீ. தெற்கே- சென்னைக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது. 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டது.


மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.