அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கை ஜூலை 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.


ஜூலை 6 விசாரணை


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கை ஜூலை 6ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


ஒற்றைத் தலைமை விவகாரம்


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர், ‘ஒற்றைத்தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியிலேயே வெளியேறினர்.


இதனால், தற்போது வரை அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பரபரப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.


இந்நிலையில் ஈபிஎஸ் தரப்பில் அதிக எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவு இருப்பதால் பொதுக்குழுவை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகின்றனர்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


அதிமுக பொதுக்குழுவு கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


இந்த வழக்கு இன்று (ஜூலை.04) விசாரணைக்கு வந்த நிலையில், மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.


இந்நிலையில் பழைய உத்தரவு பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கோரி மேல் முறையீட்டு வழக்கில் கோரிக்கை வைக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும், நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட பழைய உத்தரவுகள் அனைத்தும் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண