பிரபல நகைக்கடை
தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கௌரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் தனியார் கடை உள்ளது. இக்கடை அப்பகுதியில் மிகப் பிரபலமான கடை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நேற்று இரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்த, பின்னர் கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மிகப்பெரிய கடை என்பதால் அந்த கடையில் அனைத்து விதமான, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடையை பூட்டி விட்ட பிறகு யாராவது கொள்ளை அடிக்க முயற்சி செய்தால், காவல்துறை மற்றும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை ஒலி
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் கடையின் ஊழியர் ஜெகதீஷ் என்பவரின் செல்போனுக்கு எச்சரிக்கை ஒலி அடித்துள்ளது. அதன் பின்னர் அவர் சுமார் ஆறு மணிக்கு மேல் எச்சரிக்கை ஒலி அடித்தது. குறித்து காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், அங்கு வந்த போலீசார் கடையின் ஊழியர்கள் உதவியுடன் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் உள்ளே கடையின் சுவர்களில் உள்ள கபோர்டுகளில் டிஸ்ப்ளேக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தீவிர விசாரணை
பின்னர் சம்பவ இடத்திற்கு பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டு கடையில் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவாகியுள்ள கொள்ளையரின் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளி ஒருவர் கைது
நகை கடையில் அடித்த நேரத்தை வைத்து அப்பகுதியில் இருந்து சென்றவர்களில், சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தாம்பரம் அருகே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலே குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்